‘லியோ’ படத்துக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் தற்போது 5 முக்கிய நடிகர்கள் இணைந்திருப்பதை போஸ்டர்கள் வழியாக அறிவித்துள்ளது படக்குழு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டபோது, அதில் பின்னணி இசை மீது இசைஞானி இளையராஜா உரிமைகோரி வழக்கு பதிவிட்டார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை போஸ்டர் வழியாக வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களால் இனையதளத்தில் பெரியளவில் பகிரப்பட்டது.
கடந்த வாரத்தில் ‘கூலி‘ படத்தில் நடிக்கும் முக்கிய பாத்திரங்களை போஸ்டர் வழியாக அறிவித்தனர். அதில் முதலில் மலையாளத்தில் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படம் வழியாக பிரபலமான நடிகர் சௌபின் ஷாஹிர் நடிப்பதை அறிவித்தனர். ‘தயாள்’ என்ற அவரின் பாத்திரம் கையில் தங்க கடிகாரத்தை பார்த்தபடியான போஸ்டர் வெளியானது.

இரண்டாவதாக பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்தது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்தில் மம்முட்டியின் பாத்திரத்தில் நடிக்கவிருந்தார் நாகர்ஜுனா. அந்த வாய்ப்பு அமையாத நிலையில் இந்த படத்தில் இருவரும் இனைந்து நடிக்கப்போகிறார்.
Introducing @iamnagarjuna as Simon, from the world of #Coolie 🔥😎
— Sun Pictures (@sunpictures) August 29, 2024
Wishing the versatile performer King #Nagarjuna a Happy Birthday!💥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv pic.twitter.com/AvI6qmUMnT
‘கூலி’ படத்தின் முதல் பாடலான ‘DISCO’ வெளியானதை அடுத்து, இந்த இருவரின் கதாபாத்திரங்களின் முதல் எழுத்துக்களான D மற்றும் Sஐ வைத்து, அடுத்த பாத்திரங்களின் பெயர்களை இணையவாசிகள் காய்க்க தொடங்கினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரமான ‘ப்ரீத்தி’ உடைய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. இந்த பாத்திரமும் கையில் மண்வேட்டியை பிடித்திருக்கும் போஸ்டர் வெளியானது.
அடுத்த ‘கூலி’ பாத்திரத்தின் போஸ்டர் வெளியானதும் இணையதளத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இந்த இரு நடிகர்கள் இணைவதை பகிர்ந்து கொண்டாட தொடங்கினர். நடிகர் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற பாத்திரத்தில் நடிப்பதை தெரிவித்ததும், 1986க்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ், 38 வருடங்களுக்கு பிறகு இணைவைது பேசுபொருளானது.

அடுத்ததாக ‘கூலி’ படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா உடைய ‘கலீஷா’ பாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. இதன் முழ இப்படத்தில் தென்னிந்திய சினிமா துறையில் பிரபலமான நடிகர்களை இணைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தை ஒரு Pan இந்தியா படமாக அமையவுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் பாடல்கள் கண்டிப்பாக வெளியானதும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இன்று கடைசியாக படத்தின் ஹீரோ நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குது. ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள ரஜினிகாந்த், இந்த போஸ்டரில் கையில் கூலியாட்கள் காட்டும் badge ஒன்றை வைத்துள்ளார். அதில் 1421 என்ற எண் இருப்பதாய் ஆராய தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com