முன்னால் சிஎஸ்கே மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஆன சுப்ரமண்யம் பத்ரிநாத் சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் படமான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் “GOAT” திரைப்படத்தில் கிளைமாக்ஸில் வரும் காட்சிகளுக்கு அளித்த டப்பிங் அனுபவத்தை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு விளையாடியுளார். சிஎஸ்கே அணியில் விளையாடிய போது அவருக்கு ரசிகர்கள் உடனும் தோனி உடன் உருவான ஆழமான உறவையும், அதன் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்சில் வர்ணனையாளராக 8 வருடங்களாக பணியாற்றி நல்ல பாராட்டுக்கள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது குறித்து அந்த காணொளியில் பகிர்ந்தார். Goat படக்குழுவிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், இறுதி காட்சி CSK vs MI போட்டியாக இருக்கும் அதில் வரும் கிரிக்கெட் வர்ணனையை அவர் தான் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டதாக பேட்டியில் கூறியிருந்தார். CSK, தோனி, கிரிக்கெட், வர்ணனை இந்த அனைத்துடனும் நல்ல இணைப்பு இருந்ததால் மிகவும் எளிதாக இருந்தது என்றும், அரை நாள் டப்பிங்கை 2 மணி நேரத்தில் முடித்து விட்டதாகவும் கூறினார்.
Have done my bit for #GOAT 🎙️my first time being part of a movie ,very excited …awaiting reviews and feedback 🤞#TheGreatestOfAllTime @actorvijay @vp_offl @Ags_production pic.twitter.com/qoLOOdHv9C
— S.Badrinath (@s_badrinath) September 3, 2024
“எனக்கு நடிகர் விஜய் மிகவும் பிடிக்கும். 2008ல் CSK அணியின் launch-க்கு வந்திருந்த போது அவரை முதல் முறை நேரில் சந்தித்தேன்.
எனது line ஓடு முடியும் என்று நானே எதிர்பார்க்கவில்லை”
என்று பல சுவாரஸ்யமான உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டார். “பச்சை புல் பத்திக்கிச்சி, நடந்தா நல்ல பாம்பு கொத்துது படுத்தா பச்சை பாம்பு கொத்துது” போன்ற தனித்துவ வார்த்தைகளை இவரின் வர்ணனையில் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com