ஒரு நாளில் ஏராளமான புதிய மற்றும் பழைய திரைப்படங்கள் ott-க்கு வருகை தந்தாலும் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் காண்பது வர்ணிக்க முடியாத இன்பத்தை தரும். அதிலும் குறிப்பாக சினிமா ரசிகர்களுக்கு திரையரங்கு தான் ஆலயம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த வாரம் December 13 அன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவற்றின் பட்டியல்,
1.Soodhu Kavvum 2: Naadum Naatu Makkalum
நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ள prequel திரைப்படம் ஆன “சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்” என்ற திரைப்படத்தில் அகில உலக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிவா இதில் கதாநாயகன் ஆக நடித்துள்ளார்.
இயக்குனர் – SJ அர்ஜுன்
நடிகர்கள் – சிவா, ஹரிஷா, M.S.பாஸ்கர், ராதா ரவி, கருணாகரன்
வெளியாகும் நாள் – டிசம்பர் 13, 2024
(Image source – IMDb)
2.Miss You
பல வருடங்களுக்கு பிறகு ரொமான்டிக் திரைப்படத்தின் கதாநாயகன் ஆகிறார் நடிகர் சித்தார்த். தான் மிகவும் வெறுக்கும் பெண்ணை காதலிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் நாயகன் வாழ்க்கையில் அடுத்து நடக்கப் போகும் உணர்ச்சி மிகுந்த roller coaster போன்ற பயணம் தான் ‘Miss You’ திரைப்படம்.
இயக்குனர் – N.ராஜசேகர்
நடிகர்கள் – சித்தார்த், ஆஷிகா, கருணாகரன், பால சரவணன்
வெளியாகும் நாள் – டிசம்பர் 13, 2024
(Image source – IMDb)
3.Once Upon a Time in Madras
த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் “Once Upon a Time in Madras”. நான்கு வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கை தற்செயலாக ஒரு கதாபாத்திரம் கண்டுபிடிக்கும் துப்பாக்கியால் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. மாறுவதற்கு காரணம் என்ன? அப்படி அனைவரின் வாழ்க்கையை மாற்றும் அந்த கதாபாத்திரம் யார்? என்று இது போன்ற கேள்வியுடன் படத்தின் ட்ரைலர் அமைந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் – பிரசாத் முருகன்
நடிகர்கள் – பரத், பவித்ரா, அபிராமி,அஞ்சலி நாயர், ஷான்
வெளியாகும் நாள் – டிசம்பர் 13, 2024
(Image source – IMDb)
4.Mazhaiyil Nanaigiren
அறிமுக இயக்குனர் சுரேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த வாரம் வெளியாகும் மற்றொரு ரொமான்டிக் திரைப்படம் தான் “மழையில் நனைகிறேன்”. எதிர்காலத்தை பற்றி மிகுந்த கற்பனைகள் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நுழையும் காதல். அதன் பிறகு நடக்கும் காட்சிகள் காதல், கோபம், மனக்கசப்பு, குழப்பம் என பல விதமான கோணங்களில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
இயக்குனர் – T.சுரேஷ் குமார்
நடிகர்கள் – அன்சன் பால், ரேபா ஜான், அனுபமா குமார், சங்கர் குரு ராஜா
வெளியாகும் நாள் – டிசம்பர் 12, 2024
(Image source – IMDb)
இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் ரொமான்டிக், த்ரில்லர், ஆக்ஷன், மற்றும் நகைச்சுவை என பல விதமான genre-ல் வெளியாக உள்ளது.