Home Cinema News December 2024 முதல் வாரம் OTTயில் வெளியாகும் தமிழ்/தமிழ் dubbing திரைப்படங்கள் 

December 2024 முதல் வாரம் OTTயில் வெளியாகும் தமிழ்/தமிழ் dubbing திரைப்படங்கள் 

விறுவிறுப்பாக இந்த ஆண்டின் இறுதி மாதம் நோக்கி உலகமே பயணித்து கொண்டிருக்கும் நிலையில் December மாதம் ott-யில் திரைப்படங்கள் வெளியாகும் பட்டியல்.

by Shanmuga Lakshmi

கோலிவுட் மற்றும் பிற மொழி என பல்வேறு திரைப்படங்கள் December 2024 முதல் வாரத்தில் பலவிதமான ott-யில் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் திரைப்படத்தின் மீது அதீத காதல் கொண்டுள்ள அனைத்து ரசிகர்களுக்கும் வரப்பிரசாதம் ஆக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தமிழில் dubbing செய்யப்பட்ட திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

அமரன் 

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான “அமரன்” திரைப்படம் தற்போது ott-யில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது மனைவி இந்து ரெபேக்காவின் வாழ்க்கை நிகழ்வுகளை மெருகேற்றிய திரைக்கதையில் உலகில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் படைத்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. 

OTT தளம் – Netflix 

வெளியாகும் நாள் – டிசம்பர் 5, 2024

Amaran -Tamil movie

Image Source – Netflix (Instagram)

மட்கா

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகன் ஆன வருண் தேஜ் “மட்கா வாசு” என்ற அதிரடியான gangster வேடத்தில், GOAT பட நாயகி மீனாக்ஷி சவுதிரி உடன் இணைந்து நடித்த “மட்கா” என்ற தெலுங்கு திரைப்படம் தற்போது ott-யில் தமிழ் உட்பட ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் dubbing செய்யப்பட்டுள்ளது.

OTT தளம் – Amazon Prime Video 

வெளியாகும் நாள் – டிசம்பர் 5, 2024

Matka - Telugu movie

Image Source – Prime Video India (Instagram)

அக்னி 

“Scam 1992” என்ற வெப் தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பிரதீக் காந்தி இவருடன், “Mirzapur” என்ற மற்றொரு blockbuster வெப் தொடரில் மிரட்டலான ‘பூல்ச்சந் திரிபாதி’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் திவ்யேந்து இணைந்து நடித்துள்ள திரைப்படம் “அக்னி”. இந்த திரைப்படம் தீயணைப்பு வீரர்களின் அறியப்படாத வாழ்க்கை, அவர்களின் தியாகம், துயரம், நேர்மை ஆகியவை இதுவரை திரையில் கூறப்படாத பாணியில் இயக்குனர் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் நேரடியாக ott-யில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

OTT தளம் – Amazon Prime Video 

வெளியாகும் நாள் – டிசம்பர் 6, 2024

Agni - Hindi movie

Image Source – Prime Video India (Instagram)

போகன்வில்லா

மலையாளத்தில் சிறந்து விளங்கி வரும் நடிகர்கள் ஆன குஞ்சாக்கோ போபன் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் அக்டோபர் 17, 2024 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது “போகன்வில்லா” ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மலையாளத்தில் “Trance, 5 சுந்தரிகள், வரதன்” போன்ற வெற்றி படங்களை இயக்கிய அமல் நீரத் இந்த படத்தை psychological திரில்லர் கதைக்களத்தில் இயக்கியுள்ளார். பஹத் மற்றும் மலையாள திரைப்பட ரசிகர்களை இந்த திரைப்படம் நிச்சயம் கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

OTT தளம் – Sony LIV 

வெளியாகும் நாள் – டிசம்பர் 13, 2024 

Bougainvillea - Malayalam movie

Image Source – Sony LIV (Instagram)

மேலும் சமீபத்தில் வெளியான “கங்குவா, SIR மற்றும் சொர்க்கவாசல்” போன்ற தமிழ் திரைப்படங்கள் இந்த மாதம் விரைவில் ott-யில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.