கொண்டாட்டம் மற்றும் குதூகலம் நிறைந்த திரையரங்கில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய பல திரைப்படங்கள் “December 2024” இறுதி வாரத்தில் பலவிதமான ott தளங்களில் வருகை தந்துள்ளது/வரவுள்ளது.
நிறங்கள் மூன்று
இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் “நிறங்கள் மூன்று”. இதில் அதர்வா, ரஹ்மான், மற்றும் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தை மேற்கொண்டு நடித்துள்ளார். மூன்று வித்யாசமான கதாபாத்திரங்கள் படத்தில் ஒரு புதிரான இடத்தில் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
OTT – ஆஹா தமிழ்
வெளியாகும் நாள் – டிசம்பர் 20, 2024

Image Source – Aha Tamil (Instagram)
அந்தகன்
கோலிவுட்டின் டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக மீண்டும் திரையில் தோன்றிய ரீமேக் படம் “அந்தகன்”. இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் என்ற படத்தை சில மாற்றங்கள் செய்து தமிழில் எடுக்கப்பட்டது. வெள்ளித்திரையில் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது.
OTT – ஆஹா தமிழ், SUN NXT
வெளியாகும் நாள் – டிசம்பர் 25, 2024

Image Source – Aha Tamil (Instagram)
வட்டார வழக்கு
ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்ட “வட்டார வழக்கு” திரைப்படம் விமர்சன ரீதியாக வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
OTT – டென்ட் கொட்டா
வெளியாகும் நாள் – டிசம்பர் 27, 2024

Image Source – IMDb
வைட் ரோஸ்
நடிகை ஆனந்தி நாயகியாக நடிக்கும் “வைட் ரோஸ்/White Rose” என்ற தமிழ் திரில்லர் திரைப்படம் ஒரு சைக்கோவால் கடத்தப்பட்ட தனது குழந்தையை காப்பாற்ற போராடும் அன்னையின் கதையாக அமைந்துள்ளது. இதில் R.K.சுரேஷ், விஜித்,பேபி நக்ஷத்ர, ரூசோ ஸ்ரீதரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்றியுள்ளனர்.
OTT – ஆஹா தமிழ்
வெளியாகும் நாள் – டிசம்பர் 27, 2024

Image Source – Aha Tamil (Instagram)
சொர்க்கவாசல்
அதிரடியான கதை களத்தில் முதல் முறையாக நடித்துள்ள நடிகர் மற்றும் இயக்குனர் ஆன RJ பாலாஜியின் “சொர்க்கவாசல்” இந்த வாரம் ottயில் வருகை தர உள்ளது.
OTT – Netflix
வெளியாகும் நாள் – டிசம்பர் 27,2024

Image Source – Netflix (Instagram)
ஜாலிலோ ஜிம்கானா
இந்த வாரம் வெளியாகும் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் வெளியாகும் ஒரே நகைச்சுவை திரைப்படம் “ஜாலிலோ ஜிம்கானா” மட்டுமே. இதில் பிரபு தேவா பூங்குன்றன் என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் மடோனா செபாஸ்டியன் பவானி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் IMDb ரேட்டிங்கில் 8.3/10 புள்ளிகள் பெற்றுள்ளது.
OTT – ஆஹா தமிழ்
வெளியாகும் நாள் – டிசம்பர் 30,2024

Image Source – Aha Tamil (Instagram)
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]