Home Cinema News விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு!

விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு!

by Naveen Dhayalan

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் கைவசம் ‘ராயன்’, ‘குபேரா’, ‘தேரே இஷ்க் மெய்ன்’, ‘இளையராஜா’ பயோபிக் ஆகிய படங்கள் உள்ளது. இது தவிர இளம் நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் தனுஷ் இயக்கி கொண்டிருக்கிறார்.

FotoJet 4

இந்நிலையில், தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியிருக்கிறது. 2004-ல் தனுஷ், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

2022-ல் தனுஷ், ஐஸ்வர்யாவை பிரியப்போவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கிய புதிய படமான ‘லால் சலாம்’ சமீபத்தில் வெளியானது. இதில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.