Home Cinema News நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

by Santhiya Lakshmi


கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், ‘ராயன்’, ‘குபேரா’, ‘தேரே இஷ்க் மெய்ன்’, ‘இளையராஜா’ பயோபிக் என நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர பவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடிக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார்.

FotoJet 4

2004-ஆம் ஆண்டு தனுஷுக்கும், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

2022-ஆம் ஆண்டு தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அவர்களே தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். சமீபத்தில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.சுபா தேவி, நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.