நடிகர் Dhanush உடைய 52வது படத்தின் செய்தி இன்று வெளியாகியுள்ளது. புது தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து D52 படம் உருவாகிறது.
நடிகர் Dhanush அடுத்தடுத்ததாக பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் 2024ல் ‘Captain Miller’ படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய 50வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்தார். இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பு பெற்றது.
NEW BEGINNINGS! 💥
— DawnPictures (@DawnPicturesOff) September 17, 2024
Dawn Pictures launches with a bang!
We are proud to announce our maiden project #D52, starring @dhanushkraja sir 🔥@aakashbaskaran @wunderbarfilms @DawnPicturesOff #DawnPictures @theSreyas pic.twitter.com/Iet4X0cdD1
D52 படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான Dawn Pictures நிறுவனம் தயாரிக்கிறது. இவர்களின் முதல் தயாரிப்பாக அமைந்துள்ள இப்படத்தில் ‘நடிப்பின் அசுரன்’ தனுஷ் உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்கப்போவது யார்? படத்தில் நடிக்கும் துணை நடைக்கற்கள் என அடுத்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் Dhanush, நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் அவர் இசையமைப்பாளர் இளையராஜா உடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனுஷ் இயக்கும் இரண்டாவது படமும் வேகமாக உருவாகிவருகிறது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தில் பல இளம் நடிகர்களை இயக்கியுள்ளார் தனுஷ். இப்படி தன்னுடைய பல மாத Call sheet கிடைக்காமல் பல இயக்குனர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]