நடிகர் தனுஷின் Raayan படத்தின் இரண்டாவது பாடலின் வரிகள் கொண்ட வீடியோ வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
Raayan படம் நடிகர் தனுஷின் இரண்டாவது இயக்கம். ஏ ஆர் ரஹ்மான் இசையில் அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காலிதாஸ் ஜெயராம் நடித்துள்ள படத்தின் இரண்டாவது பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. Water packet என்ற பாடல் வரிகள் கொண்ட தொகுப்பு வீடியோவாக வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்று மாலை இந்த பாடலை வெளியிட்ட படக்குழு அதை வலைதளங்களில் பதிவிட்டும் பிரபலமாக்கி வருகிறார்கள்.
Pyaaru karthaammaa 😍 #WaterPacket lyrical video is out now! https://t.co/b8MbF5hzZq@dhanushkraja @sunpictures @Music_Santhosh @ShwetaMohan #GanaKadhar @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan…
— A.R.Rahman (@arrahman) May 24, 2024
இந்த பாடல் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி இடையான பாடலாக தெரிகிறது. இதுவரை இந்த படத்தின் கதாப்பாத்திரங்களை பற்றி பெரிய தகவல் கிடைக்காத நிலையில் இந்த பாடல் வழியாக இந்த இருவரின் ஜோடி பற்றி தெரியவந்துள்ளது.

‘வாட்டர் பேக்கட்’ பாடலை கானா காதர் அவர்கள் எழுதியுள்ளார். இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஒரு கானா பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் குறல் கொடுத்துள்ளார்கள். வெளியான மூன்று மணி நேரத்தில் 1.5 லட்சம் பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர் புகைப்படங்கள் உடன் தொகுப்பாக இரண்டு நடிகர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. சில நாட்களுக்கு முன் அதிரடியான முதல் பாடலை தந்த படக்குழு இப்போது ஒரு காதல் பாடலை வெளியிட்டுள்ளது. இந்த படம் ஜூன் 13 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]