நடிகர் Dhanush இயக்கி நடிக்கும் அடுத்த படத்தின் செய்தி வெளியானது. ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, அவரின் Wunderbar Films நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் நடிகர் Dhanush இயக்கம் நான்காவது படமாகும்.
‘இட்லி கடை’ படத்தின் முதல் போஸ்டர் சாலையோரம் உள்ள ஒரு கடையை காட்டுவதாக உள்ளது. மாலை வேளையில் ஒரு கடையில் இருவர் பணியாற்றுவது போல இந்த போஸ்டர் உள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை Red Giant நிறுவனமும், Dawn Pictures நிறுவனமும் இணைந்து தயாரித்து வழங்கவுள்ளார். 2024ல் நடிகர் Dhanush ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் ‘ராயன்’ படத்தை வெளியிட்டார். அதை தொடர்ந்து மூன்றாவது இயக்கமாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி வருகிறார்.
‘இட்லி கடை’ படத்தில் நடிக்கவுள்ளதை தாண்டி, தற்போது ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி மொழியில் ஏற்கனவே இரண்டு முறை இயக்குனர் ஆனந்த் L ராய் படத்தில் நடித்த Dhanush, மூன்றாவது முறையாக ‘Tere Ishq Mein’ படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் உள்ளது. இசைஞானி இளையராஜா உடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்துவருகிறார் நடிங்கர் தனுஷ்.
Happy birthday to the one and only @ilaiyaraaja sir. pic.twitter.com/adYPIqjc5s
— Dhanush (@dhanushkraja) June 2, 2024
தன்னுடைய முதல் இயக்கமான ‘பா. பாண்டி’ படத்தில் ஒரு அழகான கதையாக எடுத்து, அதை கச்சிதமாக இயக்கவும் செய்தார். இரண்டாவது படத்தில் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் கதையை எடுத்து வெளியிட்டார். மூன்றாவது கதையும் இளம் நடிகர்கள் கொண்டு காதல் கதையாக உருவாகிறது. ‘இட்லி கடை’ படத்தின் கதை கமர்ஷியல் கதையாக அமையாமல் ஒரு உணர்வுபூர்வமான படமாக உருவாக அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]