Dhanush நடிப்பில் சேகர் கம்முலா இயக்கி இருக்கும் Kubera-வில் ஸ்டைலான கெட்டப்பில் Nagarjuna.
Kuberan மற்றும் Raayan- தமிழில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் என்பது தெரிந்தது தான். ஆனால் ஒரே வருடத்தில் தானே இயக்கி நடித்து மற்றுமொரு பெரிய படத்தில் வெறித்தனமாக நடித்து வருகிறார். தன்னுடைய 50வது படமான ‘Raayan’ படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலையில் உள்ளது. தற்போது ‘Kubera’ படத்தில் மிக கடினமாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

‘Kubera’ படத்தின் போஸ்டர் வெளிவந்து Dhanushன் கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மும்பையில் உள்ள தாராவியில் நடக்கும் கதை, அதில் வீடில்லாத ஏழையாக நடித்துள்ளார் தனுஷ். ஒரு பெரிய சிவன் ஓவியத்தின் முன்னாள் நிற்பது போல வந்த புகைப்படத்தில் லட்சுமி, சிவனுக்கு அன்னதானம் அழிப்பது போன்ற ஓவியம் இருக்கும். இந்த புகைப்படம் உடனே வைரலாகியது.
அடங்காத அசுரன்… ஏ.ஆர்.ரஹ்மான் ‘Raayan’ Dhanush க்கு கொடுத்திருக்கும் முதல் சிங்கிள்!
சமீபத்தில் தெலுங்கு நடிகர் Nagarjunaவின் கதாப்பாத்திர வீடியோ வெளியானது. அதில் லாரி ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் திறந்து கிடக்க, அடைமழையில் கையில் குடையுடன் ஸ்டைலாக நடந்து வருவார் Nagarjuna. படத்தில் காவல் அதிகாரி பாத்திரத்தில் நடிக்க உள்ளார் Nagarjuna. இந்த அப்டேட் மக்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. இவர்களுடன் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் எதும் வெளிவரவில்லை. பாலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஜிம் சார்ப் இந்த படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்பார் என எண்ணலாம்.
மும்பையில் நடந்து வரும் படப்பிடிப்பு பற்றி Nagarjuna ஒரு சின்ன தகவல் கொடுத்துள்ளார். அதில் அவரும் Dhanush-ம் போட்டி போட்டு நடித்து வருவதாகவும். ஆனால் Dhanush-ன் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக கடுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தாராவியில் நடக்கும் படப்பிடிப்பில் 10 மணி நேரத்திற்கு மேலாக குப்பை மேட்டில் படமாக்கபட்ட காட்சிகளில் தனுஷின் அர்ப்பணிப்பை பாராட்டி பேசியுள்ளார் நாகார்ஜூனா. திரையில் எந்த அவதாரம் எடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி நம்ப வைக்கும் திறமை சில நடிகர்களிடம் மட்டுமே உள்ளது. அதில் நேர்த்தியான நடிகர் Dhanush என்பதில் சந்தேகமே இல்லை!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]