Home Cinema News பாலிவுட் படத்தில் தனுஷ்.. ஜோடியாக நடிக்கும் அனிமல் பட நடிகை!! 

பாலிவுட் படத்தில் தனுஷ்.. ஜோடியாக நடிக்கும் அனிமல் பட நடிகை!! 

நடிகர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் அனிமல் படம் நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

by Sruthi Balasubramanian

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் தற்போது ராயன், குபேரா உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் தனுஷ்  பாலிவுட்டில் வெளியான ராஞ்சனா, அட்ரங்கி ரே படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தெரே இஸ்க் மெயின்’ என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

தனுஷ்/ dhanush atrangi re

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இப்படம் குறித்து வேறு ஏதும் தகவல் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சமீபத்தில் அனிமல் படத்தில் நடித்து பிரபலமான நடிகை திரிப்டி திம்ரி  நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் வாரணாசி மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில்  நடத்த படகுழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.