Home Cinema News 18 ஆண்டுகளை கடக்கும் Pudhupettai “கொக்கி குமாரு”…

18 ஆண்டுகளை கடக்கும் Pudhupettai “கொக்கி குமாரு”…

தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான படைப்புகளை கொடுத்து வரும் செல்வராகவனின் கல்ட் கிளாசிக் படம் "Pudhupettai".

by Sudhakaran Eswaran

தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான படைப்புகளை கொடுத்து வரும் செல்வராகவனின் கல்ட் கிளாசிக் படம் “Pudhupettai”.

சமீபத்தில் வெளியான செல்வராகவன் படங்கள் ஓரளவு மட்டுமே வரவேற்பை பெற்ற நிலையில் அவரின் இயக்கத்தில் இதற்க்கு முன்பு வெளியான காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில்  ஒருவன் போன்ற படங்கள் இன்றும் ரசித்து கொண்டாடும் அளவிற்கு பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அந்த வகையில் “புதுப்பேட்டை” படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை தனுஷ் தனது x பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ஒரு நடிகருடைய திரை வாழ்வில் ஒரு சில படங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல தான் புதுப்பேட்டை படத்தில் “கொக்கி குமாரு” கதாப்பாத்திரமும். இந்த மாதிரியான கதாப்பாத்திரத்தை கொடுத்த செல்வராகவன் அவர்களுக்கு நன்றி. தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. “கொக்கி குமாரு” கதாப்பாத்திரம் வெறும்பெயர் அல்ல அது ஒரு “எமோஷன்” என்றும் குறிப்பிட்டிருந்தார். 

Untitled design 1 12

தற்போது பல படங்களில் “கேங்ஸ்டர்” கதைக்களம் கொண்டு படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதற்க்கு எல்லாம் முன்னோடியாக இருக்கும் ஒரு சில படங்கள்  நாயகன் மற்றும் புதுப்பேட்டை.  

செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, அழகம் பெருமாள், பாலா சிங்க் ஆகியோர் நடிப்பில் 2006-ல் வெளிவந்த படம் “புதுப்பேட்டை”. சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து பள்ளி படிப்பை கூட முடிக்காத ஒருவன் தனது வாழ்வில் பல கஷ்டங்கள், அவமானங்களை கடந்து அரசியல்வாதிகளிடம் தன்னை நிரூபித்து ஒரு “கேங்ஸ்டர்” ஆக எப்படி மாறுகிறான் என்பது தான் கதை. புதுப்பேட்டை படத்தில் தனுஷ் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.  

ஒரு சில படங்களின் 2-வது பாகம் வரவேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து கொண்டே இருக்கும். அதே போல தான் செல்வராகவன் பேட்டி  கொடுக்கும் இடங்களில் எல்லாம் புதுப்பேட்டை “கொக்கி குமாரை” எப்போது மீண்டும் பார்க்க முடியும் என கேள்வி எழுப்பிக்கொண்டே உள்ளனர். 

தற்போதைய காலகட்ட சினிமாவிற்கு கேங்ஸ்டர் கதை என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் 15, 20  வருடங்களுக்கு முன்பு இப்படிப்பட்ட கதையை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்ததில்லை என்று கூட சொல்லலாம்.   

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ராயன் படத்தில் படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.