Home Cinema News ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது, எங்கு நடைபெற உள்ளது? 

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது, எங்கு நடைபெற உள்ளது? 

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

by Sruthi Balasubramanian

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் தனது 50-வது திரைப்படமான ‘ராயன் ‘ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்  உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28 என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக Raayan படத்தை ஜூலை 26-ம் தேதி  திரையரங்குகளில் வெளியிட இருக்கிறர்கள். இந்நிலையில் படத்துக்கான ப்ரமோஷனாக ஆடியோ ரிலீஸ் விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டாடும் விழாவாகவும் இது இருக்கும் என்கிறார்கள். ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 6-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. 

ராயன் POSTER

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.