Home Cinema News Dhanushன் ‘ராயன்’ மற்றும் Vikramன் ‘தங்கலான்’ மோதலா? 

Dhanushன் ‘ராயன்’ மற்றும் Vikramன் ‘தங்கலான்’ மோதலா? 

Raayan 2024 ஜூன் மாதம் 13 அன்று வெளியிடப்படும்.

by Vinodhini Kumar

‘ராயன்’ படம் விரைவில் வெளிவரும் என அறிவித்துள்ள படக்குழு. 

Dhanush இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வந்துள்ளது. நடிகர் Dhanush இயக்கி இருக்கும் இரண்டாவது படம் ‘ராயன்’ 2024 ஜூன் மாதம் 13 அன்று வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வந்து ரசிகர்களை உற்சாபடுத்தியுள்ளது. ‘ராயன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Raayan Cast Poster

‘ராயன்’ தனுஷின் 50 வது படமாகவும் அமைகிறது, இதில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா என பெரிய நடிகர் பட்டாளம் இணைந்துள்ளது. இதற்கு முன் ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குனராக களமிறங்கிய நடிகர் தனுஷ், ‘ராயன்’ படத்தில் முதல் முறையாக இயக்கம் நடிப்பு என்று இரண்டையும் கையில் எடுத்துள்ளார். 

‘ராயன்’ படத்திற்கு இசை அமைப்பாளர் – இசை புயல் A R Rahman. மே 9 இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ஹைப் கொடுத்துள்ளது படக்குழு. 

Vikram- பா ரஞ்சித் கூட்டணியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற படம் ‘தங்கலான்’. Vikram, மாலவிகா மோகன், பார்வதி திருவோது, பசுபதி, பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கேல்டஜிரோன் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் கோலார் தங்க ஃபேக்டரியில் நடக்கும் கதை ஆகும். 

Thangalaan Vikram

G V Prakash இசை அமைத்துள்ள ‘தங்கலான்’ படமும் ஜூன் மாதம் வெளயிட திட்டமிட்டு வருகிறார்கள். இந்த இரண்டு படங்களும் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஒரு நாள் வெளிவந்தால் தியேட்டர்கள் நிறம்பும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு நடிகர்களும் தங்களின் கடின உழைப்பால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தந்துள்ளது அனைவரும் தெரிந்தது. ‘ராயன்’ மற்றும் ‘தங்கலான்’ படங்களுக்கு இடையில் நல்ல போட்டி இருக்கும் என்பது நிச்சயம். 

ஜூன் மாதம் தான் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன்-2 வெளிவர இருந்த நிலையில், இப்போது ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக செய்தி வெளியாகி கமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.