நடிகராக தன்னை நிரூபித்த Dhanush தற்போது இயக்குனராக அவதாரமெடுத்து வந்த நிலையில் தனது மகன் யாத்ராவை பாடலாசிரியராக சினிமாவில் எண்ட்ரி செய்துள்ளார்.
துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான Dhanush தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக வரும் தனுஷ் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
நடிகர், பாடகர் என பல பரிமாணங்களில் சினிமாவில் கலக்கி வந்த Dhanush, ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். அதை தொடர்ந்து தற்போது வெளியாகி 150 கோடி வரை வசூல் செய்து கலக்கிவரும் ராயன் படத்தையும் இயக்கி நடித்திருந்தார். தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் SJ. சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
I had the privilege to watch the song with @dhanushkraja sir and pretty @priyankaamohan very cute song … and the way dir @dhanushkraja pulled a very cute dance from @priyankaamohan as a cute pretty young maami is like super & addictive , with simple cute stylish steps , she… https://t.co/ixs6qZSDHM
— S J Suryah (@iam_SJSuryah) August 27, 2024
தியேட்டரில் வசூல் வேட்டை செய்த நிலையில் அமேசான் ப்ரைம் OTT தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK). ப. பாண்டி, ராயன் வரிசையில் தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.
தனுஷின் சகோதரி மகன் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். அவரோடு மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், பவிஷ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் போன்றோர் நடித்துள்ள நிலையில் முழுவதும் 2K கிட்ஸ்களுக்கான Love ஸ்டோரியாக இருக்க வாய்ப்புள்ளது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 30-ம் தேதி வெளியவுள்ளது. இதில் GV. பிரகாஷ் குமார் இசையமைத்து பிரியங்கா மோகன் நடனமாடியதாக SJ. சூர்யா தனது X தளத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், பாடலைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது, ஐய்யர் மாமியாக பிரியங்காமோகன் எளிமையான அழகான ஸ்டைலான ஸ்டெப்களுடன் நடனமாடியுள்ளார்.

“கோல்டன் ஸ்பேரோ” என்ற பெயரில் இந்த பாடலை சுப்புலட்சுமி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், அறிவு உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில், NEEK படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளதாக பதிவிட்டிருந்தார். தனுஷ் தனது மகனை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் பாடலாசிரியராக எண்ட்ரி செய்தது ஆச்சரியமாக உள்ளது.
#NEEK first single golden sparrow https://t.co/loJ99jzPHG pic.twitter.com/1mmbuf9gdp
— Dhanush (@dhanushkraja) August 30, 2024
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]