Home Cinema News தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

by Naveen Dhayalan


கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் கைவசம் ‘ராயன்’, ‘குபேரா’, ‘தேரே இஷ்க் மெய்ன்’, ‘இளையராஜா’ பயோபிக் ஆகிய படங்கள் உள்ளது. இதில் தனுஷே இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. 

இந்நிலையில், இந்த படத்தை வருகிற ஜூன் 7-ஆம் தேதி தமிழ் மொழி மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய தனுஷ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

Raayan movie poster 4

இதில் தனுஷுடன் இணைந்து செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்,ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், சரவணன், வரலக்ஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தனுஷின் திரையுலக வாழ்வில் 50-வது படமான இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.