2019-க்கு பிறகு வெளியான Rajinikanth படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் 2023-ல் வெளியான Jailer படம் ரஜினிகாந்த் இன்னும் சூப்பர் ஸ்டார் தான் என நிரூபித்துள்ளது.
கிட்டத்தட்ட 50 வருட சினிமாவில் வில்லன் to ஹீரோவாக கொடிகட்டி பறந்த ரஜினிகாந்த் தனது மாஸ் டயலாக், ஸ்டைல் என இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக 5 தசாப்தங்களாக இருந்து வருகிறார். சில சமயம் இவர் நடித்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் என்றும் “ஒரே சூப்பர் ஸ்டார் Rajinikanth” என ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

“வயசானாலும் உன் அழகும் ஸ்டைல்-ம் மாறல” என படையப்பா படத்தில் Rajinikanth-தை பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொன்ன வசனம் இன்று அப்படியே பொருந்தியுள்ளது. கிட்டத்தட்ட 73 வயதில் இளம் நடிகர்களுக்கு இணையாக சண்டை காட்சியிலும், நடிப்பிலும் ரஜினிகாந்திற்கு உள் இருக்கும் 30 வயது இளைஞன் தான் இதையல்லாம் செய்து வருகிறான் என்ற அளவில் இருக்கிறது அவரது நடவடிக்கைகள்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ல் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி போன்றவர்களும் நடித்திருந்தனர்.
காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற ரஜினி (டைகர் முத்துவேல் பாண்டியன்) அமைதியாக தனது குடும்பத்துடன் இருந்து வருகிறார். தனது மகனும் காவல்துறை துணை ஆணையருமான வசந்த் ரவி (அர்ஜுன் பாண்டியன்) விநாயகன் (வர்மன்) என்ற சிலை கடத்தல் கும்பலின் தலைவனை எதிர்க்கிறார். பின்னர் அர்ஜுன் இறந்துவிட்டதாக ரஜினிக்கு தகவல் வருகிறது. தனது மகனின் மரணத்துக்குக் காரணமான வர்மன் கும்பலை பழிவாங்க செல்கிறார். பின்னர் அர்ஜுன் உயிரோடு இருப்பது தெரிகிறது.
மகனை உயிரோடு தருவதற்கு ஆந்திராவில் இருக்கும் ஆதி நாராயணர் கோயிலின் பழங்கால வைரம் பதித்த கிரீடத்தைத் திருடிக் கொடுக்க வேண்டும் என வர்மன் நிபந்தனை வைக்கிறான். மகனை காப்பாற்றுவதற்கு வேறு வழியில்லை என அதனை செய்வதற்கு சம்மதிக்கிறார் ரஜினி.
கிரீடத்தை எடுக்க மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷ்ரொப் ஆகியோரிடம் உதவி கேட்கிறார் ரஜினிகாந்த். இந்த மூவரும் ஒவ்வொரு சமயம் உதவி செய்கிறார்கள். ஒரு வழியாக கிரீடத்தை எடுத்து வர்மன் கும்பலிடம் தந்து விடுகிறார் ரஜினிகாந்த். தனது மகனையும் மீட்டு வீட்டிற்கு கூட்டிச்செல்கிறார்.
இதுவரை நடந்ததை விட இதற்க்கு பிறகு தான் படத்தின் ட்விஸ்ட். கிரீடத்தில் கேமரா வைத்து என்ன நடக்கிறது என்பதை கண்காணித்து வரும் ரஜினிகாந்த் ஒரு சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைகிறார். வர்மனுடன் கூட்டணி வைத்து சிலைகடத்தலில் ஈடுபட்டு பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மகனின் உண்மை நிலையை அறிந்த ரஜினிகாந்த் மனமுடைந்து விடுகிறார்.

இதனை அறிந்த வர்மன் வசந்த் ரவியை அழைத்து நடந்ததை கூறுகிறார். இந்த விஷயத்தை எதிர்பார்க்காத வசந்த் ரவி என்ன செய்வதென்று அறியாமல் இருக்கிறார். பின்னர் வர்மன் கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விடுகிறார்கள். ரஜினிகாந்த் வசந்த் ரவியிடம் அறிவுரை கூறி திருந்துமாறு சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் வசந்த் ரவி மறுத்து ரஜினியை கொல்ல முயற்சிக்கும் போது கொல்லப்படுகிறார்.
ரஜினிகாந்த் முதல் பாதியில் அமைதியாகவும் இரண்டாவது பாதியில் அதற்க்கு நேர்மாறாக அக்ரோசமாகவும், பயங்கரமாகவும் நடித்திருப்பார். கிரீடத்தை திருடும் காட்சியில் ரஜினி செய்யும் செயல்கள் இந்த வயதில் மனுச இப்படி நடிக்காரரே என்று ஆச்சரியப்பட வைத்தது. எதுவும் செய்யாமல் சாதாரணமாக நடந்து வரும் ரஜினிகாந்திற்கு bgm என்று அனிருத் தந்தது மாஸ்டர் கிளாஸ் என்றே சொல்ல வேண்டும்.
பிளஷ்பேக்கில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ஜெயிலில் ரஜினி செய்யும் அட்டகாசம் 80’s ரஜினியை நினைவு படுத்தியிருக்கும். நடை, உடை, நடிப்பு என அனைத்திலும் இன்னும் எனர்ஜி குறையவில்லை என்றே சொல்லலாம்.
அடுத்து வில்லனாக விநாயகனிடம் இருந்து இப்படிப்பட்ட நடிப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்ற வகையில் இருந்தது. பாதி தமிழ், பாதி மலையாளம் பேசும் பேச்சு, எதார்த்த நடிப்பு என முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.

படத்தின் வெற்றிக்கு ரஜினி, விநாயகன் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மோகன்லால், சிவ ராஜ்குமார் கேமியோ ரோலும் முக்கியமாக இருந்தது. ரஜினியின் நண்பனாக மேத்தியூ கதாபாத்திரத்தில் புகைபிடித்துக்கொண்டு வசனம் ஏதும் பேசாமல் சாதாரணமாக நடந்து வரும் காட்சியில் விசில் பறந்தது. சாதாரண நடையில் கூட நடிப்பை காட்டி ரசிக்க வைத்திருப்பர் complete actor ஆனா மோகன் லால்.
அதே போல சிவ ராஜ்குமார் வரும் காட்சியிலும் பெரிதாக வசனம் இல்லை என்றாலும் bgm தெறிக்க வைத்திருப்பர் அனிருத். ஹீரோ, வில்லன், கேமியோ ரோல் என அனைவருக்கும் bgm மூலம் மாஸ் எண்ட்ரி தந்து படத்தின் தரத்தை ஒரு படி மேல் கொண்டு சென்றிருக்கிறார் அனிருத்.
மேலும் தமன்னாவின் “காவலா காவலா” பாடல் சிறுசு முதல் பெருசு வரை அனைவரையும் குத்தாட்டம் போடா வைத்தது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று 650-கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் செய்து அசத்தியுள்ளது. மேலும் அமேசான் பிரைம் OTT தளத்தில் படம் வெளியாகியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]