இயக்குனராக இருக்கும்போது பெரிய அளவில் ரசிக்கப்படாத நடிகர்கள் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்கும்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முண்ணனி இயக்குனர்களாக பல வெற்றிப்படங்களை தந்தவர்கள் அவ்வப்போது தனது படங்களிலேயே cameo ரோலில் நடித்து வந்தனர். நாளடைவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இயக்குனராக இருக்கும் போது ஹிட்டடித்த வெற்றியை விட நடிகனாக பிரபலம் அடைந்தனர்.

விசு, மணிவண்ணன், பாக்கியராஜ், பார்த்திபன், K.S. ரவிக்குமார், சேரன், சுந்தர் சி, அமீர், ராம், மனோபாலா, டி .ராஜேந்தர், சீமான், சசிகுமார், சமுத்திரக்கனி, S J சூர்யா, “உறியடி” விஜயகுமார், மிஸ்கின் என 80’s காலகட்டத்தில் இருந்து இன்றுவரை இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கியுள்ளார்.
விசு:
80,90 காலகட்டத்தில் குடும்ப படங்கள், சமூக சிந்தனை கொண்ட படங்கள் என பெரும்பாலும் சிந்திக்க வைக்கும் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் விசு. தனது ஒவ்வொரு படத்திலும் ஆழமான கருத்துக்கள் கொண்டு எடுப்பது மட்டுமல்லாது வித்தியாசமான கேரக்டரிலும் நடித்து அசத்தி வந்தார். மணல் கயிறு படத்தில் “நாரதர் நாயுடுவாகவும்”, பெண்மணி அவள் கண்மணி படத்தில் “ரேடியோ மாமாவாகவும்”, இன்னும் சில படங்களில் ரசிக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மணிவண்ணன்:
காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் மணிவண்ணன். மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி காம்போ எதார்த்த நடிப்பு, நக்கல் பேச்சு என எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க வைத்துக்கொண்டே இருக்கும். “அமைதிப்படை மணிமாறன்”, வில்லாதி வில்லன் படத்தில் “MLA குப்புசாமி”, பிஸ்தா, மாமன் மகள், உள்ளத்தை அள்ளி தா, அவ்வை சண்முகி போன்ற படங்களில் ரசிக்கும் படியாக நடிப்பை வெளிக்காண்டியிருப்பார்.
பாக்கியராஜ் மற்றும் பார்த்திபன்:
இயக்குனர் பாக்கியராஜ் காமெடி கலந்து கருத்து சொல்லும் படங்களில் ரசிக்கும்படியான நடிப்பை வெளிக்காட்டுவார். ருத்ரா, அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, அவசர போலீஸ் 100, இது நம்ம ஆளு போன்ற படங்களில் எதார்த்த பேச்சு மூலம் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கும் ஆர்வத்தை தந்திருப்பார்.
தனக்கென தனி ரூட்டில் பயணிக்கும் இயக்குனர் பார்த்திபன் தான் எடுக்கும் படங்களில் மட்டுமல்ல நடிப்பிலும் ஏதேனும் புதுமையை வெளிப்படுத்தி வருவார். பார்த்திபன் மற்றும் வடிவேல் காம்போ நகைச்சுவையின் உச்சக்கட்டம். ஹீரோவாக நடித்து வந்த பார்த்திபன் தற்போது ஒரு சில படங்களில் வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

சுந்தர் சி மற்றும் அமீர்:
திரை வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய வேடங்களிலும், இயக்குனராகவும் கலக்கி வந்த சுந்தர் சி தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். தலைநகரம், தீ, அரண்மனை என ஹீரோவாக ரசிக்கும் படங்களை கொடுத்துள்ளார்.

சசிகுமார், சமுத்திரக்கனி, S J சூர்யா:
சுப்ரமணியபுரம் படத்தில் இயக்கி நடித்திருந்த சசிகுமார் தொடர்ந்து நடிப்பில் அசத்தி வந்தார். சுந்தரபாண்டியன், குட்டி புலி, வெற்றிவேல், கொடிவீரன், பேட்ட என ரசிக்கும் படியான கதாபாத்திரத்தை கொடுத்து வந்தார்.
பாலச்சந்தரின் பார்த்தாலே பரவசம் படத்தில் உதவி இயக்குனராக அறிமுகனானார் சமுத்திரக்கனி. உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன் என ரசிக்கும் படியான படங்களை எடுத்து வந்தார். அவ்வப்போது சிறு வேடங்களில் நடித்து வந்த சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பின்னர் ஈசன், வேலையில்லா பட்டதாரி, மாஸ், பாயும் புலி, விசாரணை போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிக்க வைத்தது.

விஜய், அஜித் ஆகியோரை வைத்து சூப்பர்ஹிட் வெற்றியை தந்த S J சூர்யா ஹீரோவாக நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். மெர்சல், டான், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் x போன்ற படங்களில் ஹீரோவிற்கு இணையாக பேர் சொல்லும் அளவில் நடிப்பில் ரசிக்க வைத்திருப்பார்.
K.S. ரவிக்குமார் தனது படங்களில் cameo ரோலில் நடித்து வந்த நிலையில் 2019- ல் கோமாளி படத்தில் MLA. தர்மராஜ் ஆக ரசிக்கும் படியாக நடித்திருப்பார். குடும்ப படங்களை எதார்த்தமாக எடுத்து வந்த சேரன் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
கதை எழுதி அதற்க்கு ஏற்ற ஹீரோவை நடிக்க வைத்துக்கொண்டிருந்த பல இயக்குனர்கள் மத்தியில் எனது கதைக்கு நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் பல இயக்குனர்கள் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com