“ஒரு நாள் கூத்து”, “மான்ஸ்டர்”, மற்றும் “பர்ஹானா” போன்ற ரொமான்டிக், திரில்லர் மற்றும் நகைச்சுவை படங்களை தனது அற்புதமான கற்பனையை ஒளி வடிவடித்ததில் மிக நேர்த்தியாக மக்களுக்கு படைத்த இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் நான்காவது படம் “DNA”.
கிரைம் திரில்லர் “DNA”
2023 ஆம் ஆண்டு DNA திரைப்படத்தை குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் கதாநாயகனாக அதர்வா முரளி மற்றும் நாயகியாக நிமிஷா விஜயன் நடிக்க உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த உடன் first look போஸ்டர் 2024 ஆம் ஆண்டு மே 7 அன்று வெளியிடப்பட்டது.
தற்போது இந்த படத்தின் first single நவம்பர் 13 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
“காதல் என்பது இரு மனிதர்களில் வசிக்கும் ஒரே ஆன்மாவால் ஆனது”, என்று இந்த first single பாடலிற்கு தலைப்பை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
- படம் – DNA
- இயக்குனர் – நெல்சன் வெங்கடேசன்
- நடிகர்கள் – அதர்வா முரளி, நிமிஷா விஜயன்
Atharva மற்றும் Nimisha Sajayan நடிக்கும் கிரைம் – த்ரில்லர் ‘DNA’!
யார் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர்?
இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆகும். இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் என்பதை “வாகை சூடவா, வத்திக்குச்சி, குட்டி புலி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், அமர காவியம், உத்தம வில்லன், தீரன் அதிகாரம் ஒன்று” போன்ற படங்களில் இடம் பெற்ற மெல்லிசை, துள்ளல், என பலதரப்பட்ட மெட்டுகளும் கதையை மெருகேற்றும் பின்னணி இசை உறுதி செய்தது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு படத்தில் புதுவிதமான இசையை பரிசோதனை செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். அதனால் இந்த படத்தின் first single “கண்ணே கனவே” ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே, இவரின் இசையில் “நந்தன், Weapon, குரங்கு பெடல், Boat” போன்ற படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]