ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டது DNA படக்குழு.
நடிகர் Atharva Murali அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் படம் DNA. மலையாள நடிகை Nimisha Sajayan தமிழில் நடிக்கும் மூன்றாவது படம். இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார் ‘ஃபர்ஹானா’ பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். படத்தை ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். குட்நைட் பிரபலம் ரமேஷ் திலக் மற்றும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்.
X
— Olympia Movies (@Olympiamovis) May 7, 2024
First Look of super intense thriller #DNAmovie starring @Atharvaamurali & #NimishaSajayan drops this evening at 5pm ⏳
Written & directed by @nelsonvenkat
Produced by @Olympiamovis @Ambethkumarmla@Filmmaker2015 @editorsabu @amudhanPriyan @nagarajandir @immasterdinesh pic.twitter.com/fEBTlE6fHQ
ஒரு கிரைம் – த்ரில்லர் படமாக தெரிகிறது, Atharva-வின் பிறந்த நாள் அன்று படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது, அதில் நடிகர் Atharva ஆவேசமாக முரைத்தப்படி உள்ளார்.

படத்தின் கதை, எங்கு நடக்கிறது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தற்கால கதை இல்லாமல் கடந்த காலத்தில் நடக்கும் கதையாக தெரிகிறது. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது, ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற கதைகளில் நடிகர் Atharva Murali-ன் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. அவரின் சமீபத்திய படங்கள் பெரியளவில் வெற்றியடையவில்லை. ஆனால் மணிகண்டன் உடன் நடித்த ‘மத்தகம்’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றது.

மலையாளத்தில் வெற்றிகண்ட நடிகை Nimisha Sajayan, தமிழில் ‘சித்தா’ படம் வழியாக அறிமுகமானார். பின்னர் ஜிகர்தண்டா பாகம் 2ல் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரின் வெற்றி நடை DNA-விலும் தொடருமா என பார்க்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]