Home Cinema News ‘விடாமுயற்சி’யில் நடிக்கும் ‘BIGG BOSS’ ஆரவ்வுக்கு அஜித் கிஃப்ட்டாக கொடுத்த பைக்கின் விலை இவ்ளோவா?

‘விடாமுயற்சி’யில் நடிக்கும் ‘BIGG BOSS’ ஆரவ்வுக்கு அஜித் கிஃப்ட்டாக கொடுத்த பைக்கின் விலை இவ்ளோவா?

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் 'பிக் பாஸ்' ஆரவ் முக்கிய ரோலில் நடிக்கிறார். தற்போது, அவருக்கு ஒரு சூப்பரான ரேஸ் பைக்கை அஜித் கிஃப்ட்டாக கொடுத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘விடாமுயற்சி’ படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Untitled design 50

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு மேல் வெளிநாட்டில் துவங்கவிருக்கிறது. இதில் அஜித்துடன் இணைந்து ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ‘பிக் பாஸ்’ ஆரவ், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் இந்த படத்தின் கார் சேஸிங் காட்சியை படமாக்கும்போது, அஜித் – ஆரவ் சென்ற கார் விபத்தில் சிக்கிய வீடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி ரசிகர்ளை ஷாக்காக்கியது.

இந்நிலையில், நடிகர் ஆரவ்விற்கு ஒரு சூப்பரான ரேஸ் பைக்கை அஜித் கிஃப்ட்டாக கொடுத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் விலை 35 லட்சமாம். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.