இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை அனுபமா, கயாடு லோஹர் ஆகியோரின் நடிப்பில், 21 பிப்ரவரி 2025 ல் ‘Dragon’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இளைஞர்களின் மனதை கவரும் வகையில் சிறந்த கதைக்களத்தையுடைய படமாக உள்ளது. மக்களின் வரவேற்பை பெற்று இப்படம் திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
இப்படம் இளைஞர்களின் மனதைக் கவரும் வகையில் சிறந்த கதைக்களத்தையுடைய திரைப்படமாகவுள்ளது. வெளியாகி ஒரு மாத காலம் ஆனா பிறகும் இப்படத்தைப் பார்க்க மக்கள் பெருமளவில் திரையரங்கு செல்கின்றனர்.
Some dragons don’t breathe fire, because their comebacks are hotter 😎🧯
— Netflix India South (@Netflix_INSouth) March 18, 2025
Watch Dragon on Netflix, out 21 March in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam #DragonOnNetflix pic.twitter.com/hFGn9tRTia
ஆரம்பக் காலத்தில் நல்ல பையனாக இருந்து, பள்ளிகளில் நன்றாகப் படித்த ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பையன், தான் காதலிக்கும் பெண்ணிடம் தனது காதலைக் கூற, அவர் இக்காலத்துப் பெண்களுக்கு நல்லா படிக்கும் பசங்களைப் பிடிக்காது எனக் காதலை ஏற்க மறுத்தார். அந்த வலியினால் தனது பழக்கவழக்கம் குணநலன்களை மாற்றி, தன்னுடைய சுயநலத்திற்காக அனைவரிடமும் பொய் கூறி ஏமாற்றும் ஒருவனாக அவர் மாறுகிறார்.
Read More: Dragon படத்தின் திரைவிமர்சனம் – பிரதீப் ரங்கநாதனின் அசத்தலான பரிணாமம்
அதன் பின், அவர் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் காமெடி நிறைந்த திரைப்படம் தான் ‘Dragon’. மேலும், காதல், காதல் தோல்வி, மீண்டும் முன்னாள் காதலியின் சந்திப்பு எனச் சுவாரசியமாகப் பார்த்து எண்டெர்டைன்மெண்ட் செய்யும் அளவிற்கு இப்படம் நன்றாகவே உள்ளது. எனவே, இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெருமளவு முன்னேற்றமடைந்து.
பெருமளவு ரசிகர்களைக் கவர்ந்து இப்படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக தற்போது தமிழ் திரையுலகில் வலம் வருகிறது. இப்படி அதிகளவு மக்கள் வரவேற்பைப் பெற்ற ‘Dragon’ திரைப்படம் மார்ச் 21 ம் தேதி முதல் பல மொழிகளில் Netflix – ல் ரிலீஸ் ஆகவுள்ளது. இது திரையரங்கிற்குச் செல்ல முடியாத சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
‘Dragon’ வெளியாகவுள்ள OTT விவரங்கள்
திரையரங்குகளில் நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் களைக்கட்டிய ‘Dragon’ திரைப்படம் இப்பொழுது OTT ல் அசத்த வந்துவிட்டது.
படம் | Dragon |
OTT தளம் | Netflix |
மொழி | தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி |
OTT – யில் வெளியாகும் நாள் | 21 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]