இதுவரை சமூகத்தில் சாதியால் நிகழும், நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமைகள், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை சுட்டிக்காட்டும் விதமாக தனது கதைகளை படைத்து வந்த இயக்குனர் மோகன்.ஜி தற்போது முதல் முறையாக வரலாற்று நிகழ்வை தனது அடுத்த படத்தின் மையக் கருவாக வைத்து இயக்கவுள்ளார்.
Draupathi 2 – பேசாளர்களின் செந்நீர் சரிதம்!
“Draupathi 2” என்று பெயரிடப்பட்ட இயக்குனர் மோகனின் அடுத்த திரைப்படம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை 10ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்த மிகப்பெரிய தென்னிந்திய சாம்ராஜ்யமான ஹொய்சாலா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பேசாளர்களின் வரலாற்றை தழுவி உருவாக்கப்பட உள்ளது.
பஸ்ட் லுக் போஸ்டரில் இரட்டை தலை கொண்ட கழுகு கம்பீரமாக தனது ரேகையை விரித்து கொண்டிருக்க, அதற்கு கீழே இருவேறு சாம்ராஜ்யங்களின் வீரர்கள் போரில் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆலயத்தின் கோபுரம் மற்றும் மாளிகையின் படங்களும் இதில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது கீழ்வரும் வாசகம்,
“14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட பேசாளர்களின் செந்நீர் சரிதம்”
இயக்குனர் மோகன் தனது கருத்தை எந்த ஒரு பூசலும் இன்றி மக்களிடம் படிப்பதால் அவரது கதை மற்றும் திரைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
.#Draupathi2 returns to Terrify the Silver Screen once again to reveal the untold Bloodsaga of 14th Century Hoysalas 🔥@mohandreamer @richardrishi @GhibranVaibodha @SureshChandraa@AbdulNassarOffl pic.twitter.com/7jKcMUEMpS
— Done Channel (@DoneChannel1) February 26, 2025
Draupathi 2-வில் மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி!
“Draupathi II”, இயக்குனர் மோகன் மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி இணைந்து பணியாற்றும் நான்காவது திரைப்படம் ஆகும். தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் இதுவரை காணாத ஆக்ஷன் மற்றும் மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டும் விதமாக “பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்” போன்ற இயக்குனர் மோகன் இயக்கிய திரைப்படங்கள் வரப்பிரசாதமாக அமைந்தன. இந்த மூன்று திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் இந்த கூட்டணியின் வெற்றியால் நடிகர் ரிச்சர்ட் தமிழ் சினிமாவில் மீண்டும் தடம் பதிக்க பெரிதும் உதவியது என்றே கூறலாம்.
இதனை தொடர்ந்து, இவரின் நடிப்பை தமிழ் சினிமா கொண்டாட தவறியதோ? என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு, சற்று வித்யாசமான கதைக்களம் என்பதால் அதில் நாயகனாக நடிக்கவுள்ள ரிச்சர்ட் ரிஷியின் மீது எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.
Draupathi 2 – படக்குழு
இயக்குனர் | மோகன் ஜி |
நடிகர்கள் | ரிச்சர்ட் ரிஷி |
இசை | ஜிப்ரான் வைபோதா |
தயாரிப்பு | GM பிலிம் கார்ப்பரேஷன் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]