‘சார்பட்டா’ மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் துஷாரா விஜயன். முதல் படத்திலேயே மிகவும் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துஷா அடுத்து ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது இவரது நடிப்பில் ரஜினியின் ‘வேட்டையன்’, தனுஷின் ‘ராயன்’ படங்கள் வெளிவர இருக்கின்றன. ‘ராயன்’ படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருக்கிறார் துஷாரா.
ராயன் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து விலகுவேன் எனச் சொல்லியிருக்கிறார். ‘’என்னுடைய 35-வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன். அதன் பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்குப் பிறகு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய ஆசைப்படுகிறேன்’’ எனச்சொல்லியிருக்கிறார் துஷாரா. அப்ப இப்ப துஷாராவுக்கு என்ன வயசு?!