சமீபத்தில் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’, சசிகுமார் உடன் ‘பிரம்மன்’, தனுஷ் உடன் ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் நவீன் சந்திரா. த்ரில்லர் படங்கள் மற்றும் சீரிஸில் கவனம் செலுத்தும் இவர், தற்போது ‘லெவன்’ என்ற போலீஸ் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். அதன் டீஸரை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளனர்.
‘Eleven’ படத்தை லோகேஷ் அஜீஸ் இயக்கியுள்ளார், அஜ்மல் கான், ரேயா ஹரி, AR என்டர்டெயின்மென்ட் படத்தை தயாரித்துள்ளார்கள். நவீன் சந்திரா, ரேயா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன், ஆடுகளம் நரேன், பிக் பாஸ் புகழ் ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
![தனுஷ் செல்வராகவன் வெளியிட்ட அதிரடியான ‘லெவன்’ பட டீஸர்! 2 லெவன் movie poster](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/06/Eleven-movie-poster-576x1024.jpeg)
‘லெவன்’ டீஸரில் காவல் துறை அதிகாரியாக நடிக்கும் நவீன் சந்திரா, முன்னர் நடந்த ஒரு கொலையை மறுபடியும் எடுத்து அதன் பின்னால் இருப்பது யார். எந்தவித சாட்சியும் ஆதாரமும் இல்லாத ஒரு கொலை வழக்கை தீர்ப்பாரா? யார் அந்த கொலையாளி? நடந்தது என்ன? என் டீஸர் ஒரு த்ரில்லர் படத்திற்கான நல்ல துடிப்புடன் உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கப்பட்டும் இருமொழி படமாகும்.