இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், FICCI மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் கமிட்டியின் தலைவர் கெவின் வாஷ், அதன் இணை தலைவர் சந்தியா தேவநாதன், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் போன்ற பலர் கலந்துகொண்டனர்.
A request voiced, a promise made!@ikamalhaasan Sir requested to reduce State Entertainment Tax for theatres, Deputy CM @Udhaystalin Sir assures due consideration.#KamalHaasan #UdhayanidhiStalin pic.twitter.com/X7pYBDfnus
— Raaj Kamal Films International (@RKFI) February 21, 2025
FICCI கருத்தரங்கத்தில் நோக்கம்
‘ரீஜினல் டு குளோபல்’ என்ற கருத்தை மையமாக வைத்து இந்த FICCI கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ் சினிமா வளர்ச்சிக்கும், திரையரங்குகளின் நிலையை மேம்படுத்தவும், நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் ஒரு முக்கியமான கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார். திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு வசூல் செய்யும் போது விதிக்கப்படும் மாநில பொழுதுபோக்கு வரியை (State Entertainment Tax) குறைக்க வேண்டும் என்பதே நடிகர் கமல்காசனின் முக்கிய கோரிக்கையாகும்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறிக்கை
கமல்ஹாசன் விடுத்த கோரிக்கைக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக, “இந்த கோரிக்கையை அரசாங்கம் கவனித்து, தேவையான உதவியை செய்யும்” என்று அவர் தெரிவித்துள்ளார் என ஹிந்து தமிழ் திசையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சியைப் பொருத்தவரை, இது ஒரு முக்கியமான மைல்கல் எனக் கருதப்படுகிறது. தொழில்துறையினரும் திரையரங்க உரிமையாளர்களும் இந்த முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசின் இறுதி முடிவுக்கு பிறகு தமிழ் சினிமா திரையரங்குகள் புதிய பரிணாமத்தை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி, இந்த கருத்தரங்க மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலில், ‘பையனூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் திரைக் கலைஞர்களுக்கான குடியிருப்பு அமைய இருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும்’ வெளியிட்டார். இந்த சிறப்பான அறிவிப்பிற்கும், திரையரங்குகளுக்கான வரி குறைக்கப்படுவதர்க்காக உறுதியளித்ததற்கும் தமிழ்த் திரையுலகம் சார்பில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com