கிஷோர் பாண்டுரங் பெலேகர் என்ற மராத்திய மொழி இயக்குனர் 2023ல் ஒரு ஊமை படத்தை இயக்குகிறார் என்பதே பலருக்கும் செய்தியாக இருக்கும். அதிலும் பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி, அர்விந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதரி, மராத்திய நடிகர் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் இப்படத்தில் அடிக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அப்படம் பலரின் கவனத்தை ஈர்க்கும்.

‘Gandhi Talks’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஒரு ஊமை படமாக, வசனம் ஏதும் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். அவரின் இசையால் படத்துக்கு மேலும் ஆவல் அதிகமாகியுள்ளது.
மே 5, 2022 படப்பிடிப்பு தொடங்கி, ஒரு வருடத்தில் இப்படத்தை 2023 நவம்பரில் நடந்த International Film Festival of India திரைப்பட விழாவில் திரையிட்டனர். சினிமாவின் சாராம்சத்தை புரிந்து வெறும் கமர்ஷியல் அனுபவத்துக்காக மட்டும் பார்க்காமல், அதில் சொல்லவரும் கருதுக்காகவும், உருவாக்கத்துக்காகவும் பார்ப்பவர்களுக்கு இப்படம் பிடிக்கும் என அந்த விழாவில் பார்த்த விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள்.
Vijay Sethupathi நடிப்பில் வெளியாக காத்திருக்கும் அரை டஜன் படங்கள்…
Gandhi Talks கதாபாத்திரங்கள்
விஜய் சேதுபதி – மஹாதேவ்

அர்விந்த் சுவாமி – போஸ்மேன்

அதிதி ராவ் ஹைதரி – காயத்ரி

சித்தார்த் ஜாதவ் – திருடன்

‘Gandhi Talks’ படப்பிடிப்பு உழுமையாக முடிவடைந்ததை வீடியோ வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்த படத்தின் டிரைலர் ஒரு ஆண்டுக்கு வெளியானது, அதில் ஒவ்வொரு நடிகரும் கையில் காந்தி படம் போட்டுள்ள இந்தியா ரூபாய் நோட்டை வைத்திருப்பது காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக காந்தியடிகள் சொன்ன தத்துவமான ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பதை விவரிக்கும் குரங்கு பொம்மைகளும் காட்டப்பட்டது.
The voice that matters today, the voice that will echo soon in every corner! Gandhi Jayanthi wishes to all#GandhiTalks coming soon.@arrahman @thearvindswami @aditiraohydari @SIDDHARTH23OCT @kishorbelekar #UmeshKrBansal @ZeeStudios_ #Kyoorius @moviemillent @zeestudiossouth pic.twitter.com/o29NZL1zAE
— VijaySethupathi (@VijaySethuOffl) October 2, 2024
வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள ‘Gandhi Talks’ படம் இந்தாண்டு வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு நடுவில் இந்த படம் எப்படி வரவேற்கப்படும் என்பது வெளியானதும் தெரியவரும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]