இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, ‘வின்னர்’, ‘கிரி’, ‘மத கஜ ராஜா’ போன்ற பல படங்களை இயக்கியிருந்தாலும், ஒரு சில படங்களில் மட்டுமே இவர் முன்னணி நடிகராக நடித்துள்ளார். அந்த வரிசையில் இயக்குனர் சுந்தர் சி இயக்கி அவரே முன்னணிக் கதாபாத்திரமாக நடித்து வரும் புதிய படம் தான் கேங்கர்ஸ் (Gangers). சுந்தர் சி இயக்கிய படம் என்றாலே நகைச்சுவை மற்றும் கிண்டல் பேச்சு நிறைந்த கலாட்டா படமாகத் தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட நகைச்சுவை பாணியில் உருவாகி வரும் படம் தான் சுந்தர் சி நடித்துள்ள கேங்கர்ஸ் (Gangers) திரைப்படம்.
ஒரு சில காரணங்களால் சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி 2’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம் பேக் குடுத்தார். 2010 ம் ஆண்டில் வெளியான ‘நகரம் மறுபக்கம்’ திரைப்படம் தான் சுந்தர் சி மற்றும் வாடிவேலு இணைந்து நடித்துள்ள கடைசி படம் என்பது குறிப்பிடதக்கது.
அதன் பின் 15 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படம் தான் கேங்கர்ஸ் (Gangers). மேலும், இவர்கள் இருவர் இணைப்பில் இதற்கு முன் வெளியான ‘லண்டன்’, ‘தலை நகரம்’ போன்ற படங்கள் காமெடி மற்றும் கலாட்டா நிறைந்து அட்டகாசமான படமாக இருப்பது அனைவரும் அறிந்தது.
And here they come!!
— KhushbuSundar (@khushsundar) March 3, 2025
Bow-down to the OG #GANGERS 🥊♥
The #SundarC laugh-riot will shatter the screens from April 24th 🍿#GangersFromApril24 #Vadivelu @khushsundar #AnanditaSundar @AvniCinemax_ @benzzmedia #CatherineTresa @krishnasamy_e @CSathyaOfficial @editorpraveen… pic.twitter.com/jpa1q6jusk
அதை போலாவே இப்படமும் இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் அட்டகாசமான கூட்டணியில் அசத்தலான படமாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி நிறைந்த கேங்கர்ஸ் (Gangers) திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
கேங்கர்ஸ் (Gangers) படக்குழு
நடிகர்கள் | சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, சிங்கம் புலி, பகவதி பெருமாள், மைம் கோபி |
இயக்குனர் | சுந்தர் சி |
இசையமைப்பாளர் | சத்யா சி |
தயாரிப்பு | குஷ்பு சுந்தர், சுந்தர் சி |
தயாரிப்பு நிறுவனம் | Avni Cinemax, Benzz Media |
வெளியீட்டு தேதி | 24 ஏப்ரல் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]