Home Cinema News ‘கருடன்’ வெற்றிக்குப் பின் ‘லெஜண்ட்’… துரை.செந்தில்குமார் தொடங்கிய புதுப்படம்!

‘கருடன்’ வெற்றிக்குப் பின் ‘லெஜண்ட்’… துரை.செந்தில்குமார் தொடங்கிய புதுப்படம்!

மெகா ஹிட் கருடன் திரைப்படத்தை தொடர்ந்து லெஜண்ட் சரவணாவை வைத்து படம் பண்ண உள்ளார் இயக்குனர் துரை.செந்தில்குமார்

by Sruthi Balasubramanian

இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரான துரை செந்தில்குமார் சமீபத்தில் இயக்கி, சூரி நடித்த ‘கருடன்‘ மிகப்பெரிய வெற்றிப்படமாகியிருக்கிறது. செந்தில்குமார் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர். சிவகார்த்திகேயனுடன் அடுத்து ‘காக்கிச்சட்டை’ படத்தை இயக்கியவர், தனுஷின் ‘கொடி’, ‘பட்டாஸ்’ போன்ற படங்களையும் இயக்கினார்.

Garudan Poster

இந்நிலையில் ‘கருடன்’ வெற்றிக்குப்பிறகு செந்தில்குமார் மீண்டும் பெரிய ஹீரோக்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், Legend சரவணாவின் பட இயக்குநர் ஆகியிருக்கிறார். Legend Saravana Storeஸின் உரிமையாளரான ‘லெஜண்ட்’ சரவணண் 2022-ம் ஆண்டு ஜேடி-ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆசைக்கு ஒரு படம் நடித்திருக்கிறார் என எல்லோரும் சொல்ல இப்போது அடுத்துப்படத்துடன் வந்திருக்கிறார் சரவணன்.

Legend சரவணா – துரை செந்தில்குமார் இணைந்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ்தான் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். ஹீரோயின் இன்னும் இறுதிசெய்யப்படாமல் இருக்கிறது. 

லெஜண்ட் சரவணா - துரை செந்தில்குமார்

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.