தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் Gautham Menon. ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ என சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுத்த கெளதமின் கரியர் கிராஃப் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வரை சரியாகப்போய்க்கொண்டிருந்தது. ஆனால், அதன்பிறகு ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வெந்து தணிந்தது காடு’ என அடுத்தடுத்து இயக்கிய படங்கள் எதுவும் சரியாகப்போகவில்லை. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் மட்டும் கெளதமுக்கு ஓரளவுக்கு கம்பேக் படமாக இருந்தது.

ஆனால், கடன் பிரச்சனைகள், தயாரிப்பாளர்களுடன் மோதல் என கெளதமால் அடுத்தடுத்த படங்களை இயக்கமுடியவில்லை. இயக்கிய படங்களும் முடிங்கிப்போய் பிரச்சனையில் முடிந்திருக்கிறது. 2017-ல் ஷூட்டிங் ஆரம்பித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் ஷூட்டிங் முடிந்தும் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. அதேப்போல் ‘ஜோஷ்வா இமைப்போல் காக்க’ படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இதற்கிடையே தமிழில் இயக்கினால்தானே பிரச்சனை என மலையாள சினிமாவுக்குத் தாவிவிட்டார் கெளதம் மேனன். மம்மூட்டி, நயன்தாரா நடக்கப்போகும் படத்தை இயக்கப்போகிறார் கெளதம். ஆனால், Written and Directed by Gautham Vasudev Menon என இதில் அவர் டைட்டில் போடமுடியாது. காரணம் படத்துக்கு கதை, திரைக்கதையை மலையாள சினிமாவைச்சேர்ந்த ஒரு முன்னணி எழுத்தாளர் எழுத இருக்கிறார். கெளதம் மேனன் வெறும் இயக்கம் மட்டுமே!
மீண்டும் வாங்க கெளதம்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com