கோமலா ஹரி பிக்சர்ஸ் சார்பில் ஹரி பாஸ்கரன் தயாரிக்கும் ‘Gentlewomen’ படத்தை அறிமுக இயக்குனரான ஜோசுவா சேதுராமன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் லிஜோமோள் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். பிப்ரவரி 21 ல் இப்படத்தின் முதல் பாடலாக ‘Sulunthee’ பாடல் வெளியாகியுள்ளதை தொடந்து, தற்போது அதன் அதிகாரப்பூர்வமான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி அதிக பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
‘ஜெய்பீம்’ படத்தில் சாதாரண கதாபாத்திரத்தில் தனது ஏதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகை லிஜோமோள் ஜோஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். மேலும், இவர் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ‘காதல் என்பது பொதுவுடைமை‘ படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதைபோல் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Gentlewomen’ படமும் இவருக்கு வெற்றி தரும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Most Promising Investigation Thriller! 🔥 The #Gentlewoman trailer is here!
— Lijomol Jose (@jose_lijomol) February 22, 2025
📺 Watch now ▶️ https://t.co/Z8XdC1VAII
Unravel the truth in cinemas MARCH 7th! 🎬✨@Dir_Joshua @khpictures6 @odo_pics @udhayramakrish2 @thehari___ @jose_lijomol #Losliya @rajiv_dmk pic.twitter.com/J6LdVqJo77
இந்த படத்தின் ட்ரைலர் மூலம் இது முழுவதும் பெண்களை மையப்படுத்தி காட்டும் மற்றும் சமுதாயத்தில் தனியாக வாழும் பெண்களின் நிலையை சுட்டிக்காட்டும் படமாக உருவாகியுள்ளது என தெரிகிறது. மேலும் இப்படம் பேராசை பேராபத்தை விளைவிக்கும் என்ற கருத்தையும் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. இந்த படமானது திருமணமான ஒரு ஆண் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால், குடுபத்திற்குள் ஏற்படும் பிரச்சனைகளையும், சமுதாயத்தில் ஒரு பெண் தனியாக இருப்பதால் அவர்களுக்கு நிகழும் கஷ்டங்களையும் முக்கிய புள்ளியாக எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஜோசுவா சேதுராமன், “Gentlewomen படம் பெண்களை பற்றிய விஷயங்களை எடுத்துரைக்கும் படம் என்றாலும், இது பெண்ணிய படம் இல்லை எனவும், இரண்டு பெண்களை கொண்ட கதை தான் இப்படம் எனவும்” கூறியுள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக நடக்கும் சில சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. மேலும், ஒரு நல்ல கருத்தை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படும் ‘Gentlewomen’ படம் வரும் மார்ச் 7 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Gentlewomen படக்குழு
நடிகர்கள் | லிஜோமோள் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லிய, ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன், நந்திதா ஸ்ரீகுமார், சுதேஷ். |
இயக்குனர் | ஜோசுவா சேதுராமன் |
தயாரிப்பு | கோமளா ஹரி பிக்சர்ஸ் & ஒன் ட்ராப் ஓஷன் பிக்சர்ஸ் |
இசையமைப்பாளர் | கோவிந்த் வசந்தா |
வெளியீட்டு தேதி | 7 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]