Home Cinema News கல்லா கட்டும் ‘கில்லி’ ரீ-ரிலீஸ்… ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் திணறும் திரையரங்குகள்!

கல்லா கட்டும் ‘கில்லி’ ரீ-ரிலீஸ்… ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் திணறும் திரையரங்குகள்!

கோலிவுட்டில் இது ரீ-ரிலீஸ் சீசன். விஜய்யின் 'கில்லி' தற்போது ரிலீஸாகி பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்‌ஷனை அள்ளும் நிலையில் அஜித்தின் மங்காத்தா படமும் மே 1-ம் தேதி ரீ- ரிலீஸாகயிருக்கிறது.

by Naveen Dhayalan

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் எப்படி வறட்சி நிலவுகிறதோ, அதேப்போல் நல்ல சினிமாக்கள் இல்லாமல் தியேட்டர்களிலும் வறட்சி நிலவுகிறது. இதனால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆனது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களும் ரீ-ரிலீஸுக்கு இப்போது படையெடுக்க ஆரம்பித்துவிட்டன. 

4ZbiIgl7F5ZDqvRe m5lLjL3DM9VbMFkxBv5yjzL 7LvKQiMRq nC2KW8CBI8VAoDz Tc7

விஜய் – த்ரிஷா நடிப்பில் சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2004-ல் ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படம் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 20,2024) அன்று தமிழகம் முழுக்க பல்வேறு தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. எதிர்பார்த்ததுபோலவே விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிய கடந்த இரண்டு நாட்களாகவே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ‘கில்லி’ பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டிவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கில்லி ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாகவும், இன்று வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமையுமே தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதால் இந்த வெள்ளிக்கிழமைக்குள் ‘கில்லி’ 30 கோடி ரூபாய் கலெக்ஷனைத்தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

CAnJfzGkYetb fBtnJ7xnUgPaltMNJIttiCemq50LNmzz06X23LAHYKf80JLY3lWLXdEukbcJwJfV9N7iBikDhU6xDkHIvz2Jg1S7LHcmtaI9P UBGaYHgUM85AiLpTQnvDbE3T1TD1C7UCVedCcfQ

‘கில்லி’ ரீ-ரிலீஸுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால் ‘தல’யின் சூப்பர் ஹிட் படமான ‘மங்காத்தா’ படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகிறது. வருகிற மே 1-ம் தேதி தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அஜித்குமார். இதனையொட்டி அஜித்தின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா நடித்த ‘மங்காத்தா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். 

ரீ-ரிலீஸிலும் மோதலுக்குத் தயாராகிறார்கள் தல – தளபதி ரசிகர்கள்! 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.