Home Cinema News GOAT படத்தின் கடைசி ப்ரோமோ – Remix செய்துள்ளார் பிரேம்ஜி!

GOAT படத்தின் கடைசி ப்ரோமோ – Remix செய்துள்ளார் பிரேம்ஜி!

விஜய் நடிக்கும் The Greatest Of All Time (GOAT) படம் நாளைக்கு வெளியாகவுள்ளது. அதற்கு ஹைப் ஏற்றும் வகையில் ப்ரோமோ வெளியிட்டுள்ளது படக்குழு. 

by Vinodhini Kumar

செப்டம்பர் 5 வெளியாகவுள்ள GOAT படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகளும், கொண்டாட்டங்களும் அதிகமாகிக்கொண்டே உள்ளது. அதற்கு தீனி போடும் வகையில் The Greatest Of All Time படக்குழுவும் தினசரி தவறாமல் ஒரு ப்ரோமோ அல்லது countdown விடியோவை வெளியிட்டு வந்தனர். 

அந்த வகையில், இன்று கடைசி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு நாளை வெளியாகும் படத்துக்கு மேலும் ஹைப் ஏந்தியுள்ளார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக்கி வரும் இப்படத்தின் ஆக்ஷன் நிறைந்த சண்டை காட்சிகளை கோர்வையாக சேர்த்து, முதல் முதலில் வெளியிட்ட ‘Whistle Podu‘ பாடலின் புது remix உடன் வெளியிட்டுள்ளனர். 

நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் இப்படத்துக்கு இசையமைத்து இருந்தாலும், முன்னர் இந்த கூட்டணி பெட்ரா வரவேற்பு GOAT படத்துக்கு கிடைக்காமல் இருந்தது அனைவரும் அறிந்தது. 

GOAT movie from September 5

அதிலும் முக்கியமாக ‘Whistle Podu’ பாடல் படத்தில் உள்ள கிரிக்கெட் காட்சிகளை மெருகேற்றும் வகையில் அமையும் என வெளியிடப்பட்ட பாடல். அதற்கு படக்குழு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், தற்போது, வெங்கட் பிரபு தன கையில் உள்ள கடைசி ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளார். 

ஏற்கனவே நடிகர் பிரேம்ஜியை பாடகராக பல முறை கேட்டு ரசித்திருப்போம். தற்போது இந்த படத்திலும் ‘Whistle Podu’ பாடலை தனது ஸ்டைலில் remix செய்துள்ளார். தன்னுடைய குரலில் “தளபதி Take Over” என Rap செய்துள்ளார். இதோடு மேளதாளத்துடன் உள்ள பின்னணி இசையையும் சேர்த்து இந்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.