Home Cinema News GOAT படத்தின் 4வது பாடல் ‘மட்ட’ வெளியானது!

GOAT படத்தின் 4வது பாடல் ‘மட்ட’ வெளியானது!

நடிகர் விஜய் உடைய 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (GOAT) படத்தின் 4வது பாடல், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. வெங்கட் இயக்கத்தில் நடிகர் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் நான்காவது பாடலான ‘மட்ட’ இன்று வெளியானது.

GOAT movie Matta song

AGS கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிப்பில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் இயல்பான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவிஞர் விவேக் உடைய பாடல்வரிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த பாட்டின் பாடல் வரிகளை கவிஞர் விவேக் தன்னுடைய X தலத்தில் பதிவிட்டார். இதற்கு படக்குழு மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

GOAT படத்தில் இளம்வயது விஜய் உடைய கதாபாத்திரத்துக்கான பாடலாக இது அமையும் என தெரிகிறது. இப்படத்தில் இளம் வயது விஜய்க்கு ஜோடியாக வருகிறார் நடிகை மீனாட்சி சவுத்திரி. மேலும் இந்த பாடலை பற்றி சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், “என்னுடைய Favorite பாடல்” என்றும் “மட்ட பாடல் வெளியான பின் The Greatest Of All Time படத்தின் இசைப்பற்றி தவறான கருத்துக்கள் வராது’ என்றும் தெரிவித்தார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.