உலகம் முழுதும் உள்ள 5000 திரை அரங்கில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியானது தளபதி விஜய் நடிக்கும் “The Greatest of All Time” (GOAT). வெளியான முதல் நாளே வசூல் வேட்டையை தொடங்கியது “GOAT”.
அறிவித்த படியே செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியானது “The Greatest of All Time” (GOAT). மூன்று வேடங்களில் de-aging தொழில்நுட்பத்தின் உதவியோடு தளபதி விஜய் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். இது நடிகர் விஜயின் நடிப்பில் இதுவரை பயன்படுத்த படாத தொழில்நுட்பம் ஆகும். இந்த படத்தில் நடிகர்கள் டாப் ஸ்டார் பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அதோடு இந்த படத்தில் cameo கதாபாத்திரத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகை திரிஷா, தல தோனி, நடிகர் அஜித் வரவுள்ளதாக பல செய்திகள் வெளியாகி ரசிகர்கள் இந்த படத்தை தவிர்க்க முடியாத அளவிற்கு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளை செய்துள்ளனர். “spark” பாடல் வெளியாகி பலவிமர்சங்கள் எழுந்த நிலையில் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கும் விதமாக படத்தின் ட்ரைலர் அமைந்தது.

தளபதி விஜயின் படம் box office-ல் ஒவ்வொரு முறையும் சாதனைகளை புரிந்துகொண்டே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று வெளியான “The Greatest of All Time” (GOAT) திரைப்படம், இதற்கு முன் வெளியான “லியோ” படத்தின் box office collection-ஐ விட அதிகம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2024ல் நடிகர் விஜய் கோடிக்கணக்கில் செலுத்திய வரி தொகை – வெளியானது பட்டியல்!
வெளியான முதல் நாள் 43 கோடி ரூபாய் வசூலித்து தனது செல்வாக்கை நிரூபித்து காட்டியுள்ளது “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” (GOAT) படக்குழு. தமிழ்நாட்டில் மட்டும் 38.2 கோடியும், தெலுங்கில் 3 கோடியும், ஹிந்தியில் 1.7 கோடியும் மற்றும் வடக்கு அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர்கள் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு முன் வெளியான ‘லியோ’ 142 கோடி முதல் நாள் box officeல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]