Home Cinema News நடிகர் விஜயின் GOAT பாடல் நாளை வெளியீடு!

நடிகர் விஜயின் GOAT பாடல் நாளை வெளியீடு!

பிறந்தநாள் கொண்டாட்டமாக GOAT படத்தில், விஜய் பாடிய ‘’சின்ன சின்ன கண்கள்'' பாடல் நாளை வெளியாகிறது.

by Sruthi Balasubramanian

ஜூன் 22-ம் தேதி  தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக GOAT படத்தின் இரண்டாவது பாடலை நாளை வெளியிடுகிறது வெங்கட் பிரபு & டீம்.

Goat second single poster

யுவன் சங்கர் ராஜா இசையில் GOAT படத்திலிருந்து தமிழ் புத்தாண்டுக்கு ‘விசில்போடு’ எனும் முதல் பாடல் வெளியாகியிருந்தது. யுவனின் இசையில் அனிருத்திடம் இருந்த பெப் இல்லை என்றெல்லாம் இந்தப் பாடலுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்த சூழலில் இப்போது இரண்டாவது பாடலை வெளியிடுகிறார்கள்.

விசில் போடு பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் இந்தப்பாடலையும் விஜய்தான் பாடியிருக்கிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்தினால் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது சிங்கிள் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாகியிருக்கிறது.

GOAT Whistle Podu

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.