GOAT படம் பலரின் எதிர்ப்பார்ப்புகளுடன் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய் அரசியலில் இறங்கியதும் நடிப்பதை நிறுத்துவதாகவும் அறிவித்ததும், அவரின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் வரவேற்பு அதிகமாகி உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்து நடித்து, யுவன் சங்கர் ராஜா இசையில் இதற்கு முன் வந்த பாடல் ‘Whistle podu’. வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்று, சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை முனுமுனுக்க வைத்த படம். தற்போது GOAT படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் வெளியாகி உள்ளது.
A song close to our hearts ♥️ #TheGreatestofalltime https://t.co/1Jgr7G7WG2
— Aishwarya Kalpathi (@aishkalpathi) June 21, 2024
‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மறைந்த பின்னணி பாடகியும் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணியின் குரலை AI நுட்பத்தை வைத்து இந்த படத்தில் பிரத்யேகமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.
இதற்கு முன் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். இப்போது இந்த மெலோடி பாடலை பாடியுள்ளார். இதை படத்தின் தயாரிப்பாளர்கள் வலைப்பதிவாக பகிர்ந்துள்ளனர். நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு இனிய ட்ரீட்டாக இந்த அப்டேட் அமைவதும் நாளை முழு பாடல் வெளியாவதும் கொண்டாட்டத்துக்கு வாய்ப்பாகும் என நம்பலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]