நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் ‘GOAT’. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், விஜயகாந்த் படத்தின் கதையை Copy அடித்து இப்படம் உருவானதாக ரசிகர்கள் சந்தேகித்து வருகிறார்கள்.
வெளியான முதல் நாள் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு, இப்பொழுதே ப்ளாக் பஸ்டர் என முடிவு செய்து இணையத்தில் வைரலாக பதிவிட்டு வருகிறார்கள். இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் உடைய பாத்திரத்தை AI வழியாக திரையில் காண்பித்தனர்.
‘ராஜதுரை’ மற்றும் GOAT -ன் கதை
படம் வெளியான பின் The Greatest of All Time படத்தின் கதை 1993ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ராஜதுரை’ படத்தின் கதை போலவே இருப்பதாக கண்டுபிடித்து, இணையத்தில் பகிர்ந்தனர். இரண்டு படங்களிலும் தந்தை – மகன் இடையே நடக்கும் சண்டை பற்றிய கதையாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
‘ராஜதுரை’ படத்தில் பொறுப்பான காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார். வில்லன் ஆனந்தராஜ் செய்த தவறுக்காக அவரை கைது செய்து சிறையில் அடிப்பார். அதற்கு பழி தீர்க்கும் வகையில் விஜயகாந்தின் மகனை கடத்தி வளர்ப்பார் ஆனந்த்ராஜ். வளர்ந்து வந்து தந்தையை எதிர்ப்பது தான் கதை.
#Rajadurai
— SureshEAV (@Dir_Suresheav) September 5, 2024
Plot
Rajadurai, an honest police officer arrests and humiliates a criminal Mayandi who swears revenge. Once out of the prison, he kidnap's Rajadurai's son Vijay. He later brings him up as Arun along with his own son in such a way that Vijay would do anything for… pic.twitter.com/rEYymvmK68
‘GOAT’ படத்திலும், முன்னர் சொன்ன கதை அமைப்பிலே வில்லனாக நடிக்கும் மோகன் விஜய்யின் மகனை எடுத்து வளர்க்கும்படியாக இருந்தது. இதை சுட்டி காட்டிய இணையவாசிகள், இரண்டு படங்களின் கதையையும் இணைத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
GOAT படம் பற்றிய தகவல்
இயக்குனர் வெங்கட் பிரபு, படத்தின் ரிலீசுக்கு முன்னர் GOAT படத்திற்காக ஹாலிவுட் படமான ‘Gemini Man’ படத்திலிருந்து தொழில்நுட்பங்களை பார்த்து பிரதிபலித்ததாக கூறினார். ஆனால் படத்தின் கதை உடைய தழுவல் பற்றி ஏதும் கூறவில்லை.

இப்படியான பல பேச்சு எழுந்தாலும், இந்த படத்துக்கான முதல் நாள் வசூல் 126 கோடி என படக்குழு அறிவித்துள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் 90களின் முன்னணி நடிகர்களான பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி ஆகியோர் நடித்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]