Home Cinema News நடிகர் விஜய் நடிக்கும் ‘Goat’ படத்தின் மூன்றாவது பாடல் ‘Spark’ வெளியானது!

நடிகர் விஜய் நடிக்கும் ‘Goat’ படத்தின் மூன்றாவது பாடல் ‘Spark’ வெளியானது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'Goat' படத்தின் மூன்றாவதுப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

2024ன் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘Goat‘. நடிப்பை விட்டு அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், இன்னும் ஒரு படத்தில் தான் நடிக்க போகிறார் என்பதால் அவரின் ரசிகர்கள் ‘Goat’  படத்தின் ஒவ்வொரு உப்பிடாதையும் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இன்று வெளியாகியுள்ள மூன்றாவது பாடலும் தற்போது வைரலாகி வருகிறது. 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், அவரே இந்த பாடலை பாடியுள்ளார். உடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பாடகி வருஷா பாலு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளரும் இயக்குனரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் வரிகள் எழுதியுள்ளார். 

Spark song from Goat

‘Goat’ படத்தில் முதலில் ஒரு கொண்டாட்டமான பாடல், ‘Whistle Podu’ வெளியாகி ட்ரெண்டானது. இரண்டாவதாக ஒரு காதல் பாட்டு, ‘சின்ன சின்ன கண்கள்’ வெளியாகியாது. இப்போது ஒரு ஜாலியான டூயட் பாடலாய் படக்குழு வெளியிட்டுள்ளது. 

சின்ன சின்ன கண்கள்… விஜய்யின் ‘GOAT’ படத்தில் மறைந்த பவதாரிணியின் குரல் இடம்பெற்றது எப்படி?!

இந்த மூன்றாவது பாட்டில் நடிகர் விஜய் ‘Goat’ படத்துக்காக De- Aging தொழில்நுட்பம் செய்து கொண்டார். அதை இன்று வெளியான பாடல் வரிகள் தொகுப்பில் பார்க்க முடிகிறது. பலரும் இந்த பாடலில் நடிகர் விஜய்யின் இந்த தோற்றத்தை கவனித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 50 வயதிலும் தன்னுடைய துடிப்பான நடனத்தால் மக்களை கவர்ந்துள்ளார். இந்த பாடலில் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை மீனாட்சி சவுத்ரி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.