GOAT- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கிற பெயரில் வெங்ட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். அவர் சம்பந்தட்ட காட்சிகள் இன்று சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
GOAT படத்துக்கான பரபரப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது. செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுவென முடித்துவருகிறார் வெங்கட் பிரபு.
![GOAT விஜய்யுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்… அதிரும் அப்டேட்ஸ்! 2 VijayandSk edited](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/VijayandSk-edited.jpg)
தற்போது கடைசிக்கட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் ஏற்கெனவே கிரிக்கெட் ‘தல’ மகேந்திர சிங் தோனி கேமியோ ரோலில் நடித்திருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது விஜய்யுடன் நடித்துவருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான GOAT படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா எனப்பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையே இந்தப்படத்தின் கடைசி ஷெட்யூல் தற்போது சென்னையில் நடந்துவரும் நிலையில் சிவகார்த்திகேயன், தோனி ஆகியோரையும் கேமியோ ரோலில் படத்தில் தலை காட்டவைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.