Home Cinema News Good Bad Ugly படத்தில் இணையும் முன்னணி தெலுங்கு நடிகர்!

Good Bad Ugly படத்தில் இணையும் முன்னணி தெலுங்கு நடிகர்!

அஜித் குமாரின் Good Bad Ugly படத்தில் இணைகிறார் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் வர்மா. 

by Vinodhini Kumar
Good Bad Ugly poster

நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’ படம் வெகு விரைவாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் 2025ல் வெளியாகும், இதில் மூன்று வேடத்தில் நடித்துள்ளார் அஜித். ‘மார்க் ஆண்டனி’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார்.  

Actor Naslen

நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘Good Bad Ugly’ படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஜூன் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்து விரைவாக ஷுட்டிங்கை முடித்து வருகிறது படக்குழு. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பிரபல நட்சத்திரங்களான எஸ் ஜே சூர்யா, நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ரீ லீலா நடிக்கிறார்கள். 10 வருடங்களுக்கு பின் இந்த​ படத்தில் அஜித்துக்கு இசை அமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

Sunil Varma

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ பட நாயகன் நஸ்லின் நடிக்க உள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் சுனில் வர்மா படத்தில் இணைவதும் தெரியவந்துள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ படத்தில் சுனில் வர்மா நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள சுனில் தமிழில் குறைந்த படங்களிலேயே நடித்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் என்ன கதாப்பாத்திரம் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வில்லன் பாத்திரங்களில் நடிக்கும் சுனில் குட் பேட் அக்லி படத்திலும் வில்லத்தனமாக நடிப்பாரா என பொருத்திருந்து பார்க்கலாம். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.