‘Good Bad Ugly’ படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2025ல் வெளியாகும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடித்துள்ளனர்.

மூன்று வெவ்வேறு வேடங்களில் நடித்துள்ளார், அது தான் குட், பேட், அக்லி என டைட்டிலாக அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
Second look of #GoodBadUgly #GBU mamae God Bless u❤️🙏🏻 My sir #AK sir @MythriOfficial #Naveen sir, #Ravi sir , Dinesh sir @SureshChandraa sir ❤️🙏🏻 pic.twitter.com/JH2KQrD7qE
— Adhik Ravichandran (@Adhikravi) June 27, 2024
இந்நிலையில் ‘Good Bad Ugly’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். இந்த போஸ்டரில் God Bless You Maame என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. அஜித் குமார் ஒரு மாஸான போஸில் உள்ளார். இன்று காலை முதல் அப்டேட் வருகிறது என ஆவலை தூண்டி மாலையில் போஸ்டரை வெளியிட்டனர். இந்த படத்தில் நயன்தாரா, எஸ். ஜே. சூரியா, ரெஜீனா கசாண்ட்ரா, நஸ்லீன், தெலுங்கு நடிகர் சுனில் நடித்துள்ளனர். இந்த படம் 2025 பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]