பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் மூலம் மக்கள் மனதில் அழியாத இடத்தை பிடித்தவர்கள் கோபி ,சுதாகர். தினந்தோறும் நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்வதில் வல்லவர்கள். மேலும் தமிழ் படத்தில் இடம்பெறும் செண்டிமெண்ட் காட்சிகளை தனக்கு ஏற்ற பாணியில் வெளிப்படுத்தி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்கள். இவர்களுள் ஒருவரான கோபி இதற்கு முன் உரியடி 2, செவன் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.கோபி மற்றும் சுதாகர் இணைந்து பரிதாபங்கள் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை 2018 தொடங்கினர் .
முதல் முறையாக கோபி மற்றும் சுதாகர் தனது பரிதாபங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு ‘OH GOD BEAUTIFUL’ அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் J.C ஜோ ஆவார்.
டிராகன்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு
‘Oh God Beautiful’ டைட்டில் டீஸர் வாயிலாக Truth or Lie என இருவகை பிரிவுகள் இருக்கின்றது. அதில் மூண்று குரங்கு Truth பிரிவில் அமைந்திருக்க, அதை தனது அம்புகளை வைத்து Lie பிரிவுக்கு கொண்டுச் செல்கிறது ஒரு குட்டி ஸ்மைல் சேட்டை Angel. எனவே இப்படம் நகைச்சுவை நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது .
Presenting the title look of #OhGodBeautiful ❤️ #OGB
— Parithabangal (@Parithabangal_) February 11, 2025
Title teaser ▶️ https://t.co/jaXxxtsUTX#Paridhabangal #GopiSudhakar #vishnuvijayan@Paridhabangal @AravindhrajaG
@Actor__Sudhakar @DirVishnuvj
@DOPshakthivel #Shreekarthik@SamRdx6 #JcJoe #ArunGowtham @vijayinfantart… pic.twitter.com/UMr3YxeMGD
OH GOD BEAUTIFUL படக்குழு
நடிகர்கள் | கோபி, சுதாகர் |
இயக்குனர் | விஷ்ணு விஜயன் |
எடிட்டர் | சாம் |
இசையமைப்பாளர் | J.C ஜோ |
தயாரிப்பு நிர்வாணம் | பரிதாபங்கள் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]