Home Cinema News ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்திருக்கும் ‘டியர்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்திருக்கும் ‘டியர்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

by Sivaanantham RB

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படமான ‘டியர்‘ நேற்று (ஏப்ரல் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது.

GK3ymK W8AAiJRz 1

இந்த படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ புகழ் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் டூயட் பாடி ஆடியிருக்கிறார். 

மேலும், மிக முக்கிய ரோல்களில் ரோகிணி, காளி வெங்கட், இளவரசு, கீதா கைலாசம், நந்தினி மாதேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் பழக்கம் உடையவராக வலம் வந்திருக்கிறார்.

‘NUTMEG புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கிறார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.42.35 லட்சம் (தமிழ்நாட்டில் மட்டும்)  என்று தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.