Home Cinema News ‘குட் நைட்’ போல் இதுலயும் குறட்டை பிரச்சனை… வெளியானது ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டியர்’ ட்ரெய்லர்!

‘குட் நைட்’ போல் இதுலயும் குறட்டை பிரச்சனை… வெளியானது ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டியர்’ ட்ரெய்லர்!

by Naveen Dhayalan

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் ரெடியாகியிருக்கும் புதிய படம் ‘டியர்’. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த ஆண்டு (2023) வெளியாகி ஹிட்டான ‘குட் நைட்‘ படத்தில் ஹீரோ மணிகண்டன் குறட்டை பிரச்சனையிலிருந்து விடுபட போராடுவார். அதேபோல், இந்த ‘டியர்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை குறட்டை விடும் பழக்கம் உடையவராக காட்டுகிறார்கள்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார், ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், ருகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘NUTMEG புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.