சினிமாவில் சிறந்த கூட்டணிகள் என்று கருதப்படும் பலரில் “இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் GV Prakash” கூட்டணியை Cult கூட்டணி என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இருவரும் முதல் முறையாக 2010ல் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்து பணியாற்றினர். மிகவும் வித்யாசமான சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் கார்த்தி, நடிகை ஆண்ட்ரியா, ரீமாசென், இவர்களோடு பாண்டிய மன்னனாக பார்த்திபன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பர். இந்த படத்தின் முதுகெலும்பாக ஜி.வி.பிரகாஷ் அவர்களின் பின்னணி இசையும், பாடல்களும் திரையில் தோன்றும் காட்சி மற்றும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார்.
இதே கூட்டணி தனுஷ் மற்றும் ரிச்சா கங்கோபத்யாய் இருவரும் இணைந்து நடித்த சைக்கலாஜிக்கல், ட்ராமா படமான “மயக்கம் என்ன” திரைப்படம் 2011ல் வெளியானது. Wildlife photographer ஆக விரும்பும் கதாநாயகன் அவன் எதிர்கொள்ளும் சவால்கள், அவனுள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, போதைக்கு சில நாள் அடிமைப்பட்டு பிறகு அவள் வாழ்வில் ஜெயிக்கிறானா இல்லையா என்பதே கதைக்களம். இன்றளவும் இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்து கொண்டு போராடும் இளைஞர்கள் playlist-ல் இடம்பெற்று இருக்கும். இதற்கு முதல் காரணம் இந்த cult காம்போவில் உருவாகும் படைப்பே.
அதன் பிறகு இந்த கூட்டணி வேறு எந்த படத்திலும் இணையவில்லை. மாறாக இயக்குனர் செல்வராகவன், மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. நடிகர்களாக புது பரிமாணம் எடுத்து அசத்தி வருகின்றனர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று தனது இணையதள பக்கங்களில், “மீண்டும் ஒரு புது பயணம் தொடர்கிறது” என்ற பதிவை அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]