Home Cinema News வேகம் எடுக்கும் Thalapathy 69!

வேகம் எடுக்கும் Thalapathy 69!

Thalapathy 69 படத்துக்கான ஷூட்டிங் ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

by Santhiya Lakshmi

அரசியல் களத்தில் குதிப்பதற்கு முன்பாக ‘GOAT’ தவிர இன்னொரு படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய். உடனே விஜய்யின் கடைசிப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி கோலிவுட்டைச் சுற்றிவர அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருந்த ஹெச்.வினோத்தை டிக் அடித்திருந்தார் விஜய். வினோத் சொன்ன அரசியல் கதை விஜய்க்குப் பிடித்திருக்க, கதையில் சில மாற்றங்களை அவர் சொல்லியிருந்தார்.

விஜய் சொன்ன மாற்றங்களோடு சேர்த்து ஹெச்.வினோத் ஷூட்டிங் போவதற்கான ஃபைனல் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டார். ஹெச்.வினோத் தன்னுடைய இயக்குநர் நண்பர்களிடமும் கதையை சொல்லி அவர்கள் கருத்தையும் உள்வாங்கி அதற்கு ஏற்றாற்போல கதையை தயாரித்து இருக்கிறார். ஃபைனல் ஸ்கிரிப்ட்டைக் கேட்ட விஜய்யும் ஹேப்பி. 

image 58 512x1024 1 edited

பொதுவாகவே ஹெச்.வினோத்தின் படங்களில் சமூகத்தில் நடக்கும் மோசடிகளே வெளிக்கொண்டுவருவதே படத்தின் மையமாக இருக்கும். ‘சதுரங்கவேட்டை’யில் எம்எல்எம் மோசடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டிய வினோத், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வடமாநில கொள்ளையர்கள் பற்றியும், ஆபரேஷன் பவாரியா பற்றியும் படமாக்கியிருந்தார். ‘வலிமை’யில் போதை மருந்து கடத்தல் பற்றியும், ‘துணிவு’ படத்தில் வங்கிகள் சாதாரண மக்களிடம் அடிக்கும் கொள்ளை பற்றியும் படமாக்கியிருந்தார். அந்தவகையில் Thalapathy 69 படம் சமூகத்தில் நடக்கும் அரசியல் கொள்ளைகளைப் பற்றி பேச இருக்கிறது. 

இந்தப்படத்தை தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் – ராம் சரண் நடித்த ‘RRR’ படத்தை தயாரித்த நிறுவனம் முதலில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், நடிகர் விஜய்க்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக அந்நிறுவனம் தயாரிப்பில் இருந்து விலகியது. தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய்யின் மேலாளரான ஜெகதீஷ்ஷின் ரூட் நிறுவனமுமே இந்தப்படத்தை இணைந்து தயாரிக்க இருக்கிறது. 

படத்துக்கான ஷூட்டிங் ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.