Home Cinema News ‘சில்லு கருப்பட்டி’ இயக்குனர் ஹாலிதா ஷமீம் இயக்கும் ‘மின்மினி’! 

‘சில்லு கருப்பட்டி’ இயக்குனர் ஹாலிதா ஷமீம் இயக்கும் ‘மின்மினி’! 

சில்லு கருப்பட்டி படத்திற்கு பின் இயக்குனர் ஹாலிதா ஷமீம் ‘மின்மினி’ என்ற படத்தை இயக்குகிறார்.

by Vinodhini Kumar

 2019ல் நான்கு கதைகளை கொண்டு ‘சில்லு கருப்பட்டி’ என்ற படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஹாலிதா ஷமீம். அதன் பின் 2021ல் ‘ஏலே’ படமும் 2022ல் ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற படத்தொகுப்பில் ‘Loners’ என்ற படத்தையும் இயக்கினார். 

மின்மினி poster

தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘மின்மினி’ என பெயரிடப்பட்டுள்ள படத்துக்கு கதீஜா ரஹ்மான் இசையமைக்கிறார். ‘பாபநாசம்’ படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் அனில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். புதுமுகம் பிரவீன் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

சிறுவயது முதல் ஒன்றாக வளரும் நாயகனும் நாயகியும், இமாலயத்துக்கு ஒரு பைக் பயணம் செல்கிறார்கள். அதில் இருவரின் கடந்த கால வலிகள் மற்றும் வாழ்க்கையின் புரிதலை அனுபவிக்கும் கதை தான் ‘Minmini’.

2015 மற்றும் 2022ல் இரண்டுகட்டமாக படத்தை காட்சிப்படுத்தி, சிறுவர்களாக இருந்த நடிகர்களை படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்துடன் பயணிக்க வைத்து புதுவிதமாக இயக்கியுள்ளார் ஹாலிதா ஷமீம். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ISC, ‘மின்மினி’ படத்தை தயாரித்தும் உள்ளார். R. முரளிகிருஷ்ணா இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

எட்டு வருட படப்பிடிப்பின் பதிலாக, ‘மின்மினி’ படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறதுகுறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஹாலிதா ஷமீமின் இந்த படத்துக்கு ரசிகிரகளிடையே நல்ல எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.