RJ Balaji கடைசியாக “வீட்டுல விசேஷம்”, “ரன் பேபி ரன்”, “சிங்கப்பூர் சலூன்” போன்ற படங்களில் நடித்து கலவையான விமர்சனத்தை பெற்றார். அடுத்ததாக யாரும் எதிர்பாராத விதமாக சூர்யாவின் 45 -வது படத்தை இயக்கவுள்ளார்.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் RJ பாலாஜி இதுவரை இல்லாத வகையில் சீரியஸான கேரக்டரில் “சொர்க்கவாசல்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சீரியஸான கேரக்டரில் RJ . பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் பட டீஸர்.
நடிகராகவும், இயக்குனராகவும் வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகியுள்ள RJ பாலாஜி மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையில், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் “Happy Ending” என பெயரிடப்பட்ட இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதற்கு முன்பு “குட் நைட்”, “லவ்வர்” போன்ற வெற்றி படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசரில், ஹோட்டலில் அமர்ந்திருக்கும் RJ பாலாஜியின் மறுமுனையில் கடந்த கால காதல்கள் குறித்து ஒரு பெண் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் பாலாஜியின் கையை ஃபோர்க்கை வைத்து குத்துவது போன்றும், வேறு சில பெண்கள் அவரை பிரேக் அப் செய்ய பல காரணங்கள் கூறிவருகிறார்.
பல பெண்கள் RJ பாலாஜியை கடுமையாக தாக்கும்படியான காட்சிகளும், அதிக வன்முறையான காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் படத்தில் வருமா என்பது படம் திரையிடப்படும் போது தான் தெரியவரும். மேலும் பல வசனங்கள் முகம் சுளிக்கும்படியான வார்த்தைகள் கொண்டதாக இருந்தது. படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து இரட்டை அர்த்தத்தில் இருக்கும் என டீசர் வீடியோவில் தெரிகிறது.
இந்த கூட்டணி புதுசா இருக்கே!. Suriya 45 – வது படத்தை இயக்கும் RJ. Balaji.
சூர்யாவை வைத்தும் இயக்கும் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வேலைகள் முடித்த பிறகே அடுத்த படத்தில் கவனம் செலுத்துவர் என தெரிகிறது. “Happy Ending” படமானது 2025-ல் திரைக்கு வரவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]